உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உடுப்பியின் கார்கலாவை நினைவுகூர்ந்த அண்ணாமலை

உடுப்பியின் கார்கலாவை நினைவுகூர்ந்த அண்ணாமலை

உடுப்பி மாவட்டம் கார்கலாவை நினைவு கூர்ந்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையிடம், 'உங்களை நேசித்த எங்களை ஏன் விட்டு சென்றீர்கள்' என மாநில மக்கள், 'இன்ஸ்டாகிராம்' எனும் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பி உள்ளனர்.'கர்நாடகாவின் சிங்கம்' என்று அழைக்கப்பட்டவர் ஐ.பி.எஸ்., அதிகாரியாக இருந்த அண்ணாமலை. மூன்று ஆண்டுகளுக்கு முன் ஐ.பி.எஸ்., பதவியை ராஜினாமா செய்த பின், தமிழகத்துக்கு சென்று விவசாயம் செய்து கொண்டிருந்தார்.பின், பா.ஜ.,வில் இணைந்து மாநில துணைத்தலைவராக பதவி வகித்தார். அப்போது தலைவராக இருந்து முருகன், மத்திய அமைச்சர் ஆன பின், அண்ணாமலை தலைவராக நியமிக்கப்பட்டார்.இவர் நியமிக்கப்பட்டது முதல், ஆளும் கட்சியினருக்கு 'சிம்ம சொப்பனமாக' இருந்து வருகிறார். தமிழக எதிர்க்கட்சி பா.ஜ., அல்லது அ.தி.மு.க.,வா என்று கேள்வி எழுப்பும் வகையில் செயல்பட்டு வருகிறார்.

பாக்கியம்

இந்நிலையில், ஏ.என்.ஐ., என்ற செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், கர்நாடகாவில் தான் பணியாற்றியது குறித்து விளக்கினார்.அவர் கூறியதாவது:நான் ஐ.பி.எஸ்., அதிகாரியாக பயிற்சி முடித்த பின், எனக்கு முதல் போஸ்டிங், கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள கார்கலாவில் கிடைத்தது. சிறிய நகரமான அங்கு, நான் சென்றதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். அங்குள்ள மக்கள், தாராள மனப்பான்மை கொண்டவர்கள். அவர்களின் குணாதிசயங்கள் மிக சிறந்தது.அமைதியான வாழ்க்கை வாழ்கின்றனர்; பண்பட்டவர்கள். இவை அனைத்தும் என்னை ஒரு மனிதனாக வடிவமைத்தன. ஆரம்பத்தில் கார்கலாவின் ஏ.எஸ்.பி.,யாக ஓராண்டு, எட்டு மாதங்கள் பணியாற்றினேன்.அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டபோது, மாவட்டத்தின் வரலாற்றில் முதன் முறையாக, அம்மக்கள், என்னை அங்கேயே எஸ்.பி.,யாக வைத்திருக்க முயன்றனர்.நான் மீண்டும் எஸ்.பி.,யாக பதவியேற்று, இரண்டரை ஆண்டுகள் அங்கேயே இருந்தேன். இதன் மூலம் கார்கலா, உடுப்பியில் என மொத்தம் நான்கு ஆண்டுகள் பணியாற்றினேன்.அங்குள்ள மக்கள் ஏழைகள். அவர்களில் ஒருவனாக என்னை அவர்கள் நினைத்ததால், சிலர் நில தகராறு இருக்கிறது; தீர்த்து வையுங்கள் என்று என்னிடம் வருவர். கடற்கரை பகுதி மக்கள், மிகவும் மதப்பற்று மிக்கவர்கள். நான் கடவுள் மீது பயம் உள்ளவன்.

மதம்

மதத்தை அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக கருதுகின்றனர். 'காந்தாரா' மூலம், கடற்கரை மக்களின் வழிபாடு, உலகளவில் பிரபலமானது.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கு உடுப்பி மாவட்ட மக்கள் மட்டுமின்றி, கர்நாடக மக்கள் அனைவரும் பதில் அளித்துள்ளனர்.இணையவாசி ஒருவர், 'நானும் கார்கலாவை சேர்ந்தவன் தான். நீங்கள் அங்கு இருந்தபோது, நாங்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தோம். நீங்கள் எங்கு பேசினாலும், நான் அதில் கலந்து கொண்டிருப்பேன்' என்று கூறியுள்ளார்.மற்றொரு இணையவாசி, 'உங்களை இவ்வளவு நேசித்த கர்நாடக மக்களை ஏன் வீட்டு சென்றீர்கள். கார்கலாவில் நீங்கள் இருந்த போது, குற்றச்சம்பவம் குறைவாக இருந்தது. ஆனால், இப்போது அப்படி அல்ல' என்றார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

N Sasikumar Yadhav
பிப் 23, 2025 18:20

கோபாலபுர கொத்தடிமைகள் எப்போதும் நஞ்சை கக்குவதையே தொழிலாக வைத்து கொண்டொருக்கிறானுங்க . தமிழக திராவிட மாடல் தலைவருதான் தினமும் போட்டோ சூட் செய்து விளம்பரம் செய்து விளையாடுகிறார் #Get_Out_Stalinu . பரந்த பாரத பிரதமரையே சொல்கிறானுங்க இந்த மானங்கெட்ட திமுக களவானிங்க


தஞ்சை மன்னர்
பிப் 23, 2025 13:01

ஹி ஹி ஒரு எலி தன்னை தானே புலி என்று நினைத்து கொண்டு உலா வந்ததாம்


தஞ்சை மன்னர்
பிப் 23, 2025 12:57

தற்புகழ்ச்சி தன்னையும் கெடுக்கும் சுத்தி இருப்பவர்களையும் கெடுக்கும் இது அண்ணாமலையை கெடுக்க ஒரு கும்பல் செய்யும் சதி போலவே இருக்கு கேட்குமா இல்லை தன்னை தானே அழித்து கொள்ளுமா பார்ப்போம்


Ramesh Sargam
பிப் 23, 2025 12:47

உங்களை இவ்வளவு நேசித்த கர்நாடக மக்களை ஏன் வீட்டு சென்றீர்கள். கார்கலா மக்கள். ஆனால் தமிழகத்தில் திமுகவினரின் ஊழல்களை புட்டுப்புட்டு வைப்பதால் இவரை, அந்த திருட்டு திமுகவினர் எப்பொழுது தமிழகத்தை விட்டு செல்வார் என்று எதிர்பார்க்கின்றனர். GET OUT STALIN.


RAMAKRISHNAN NATESAN
பிப் 23, 2025 09:26

உதார்மலை என்று இவர் அன்போடு அழைக்கப்படவேண்டும் .......


நிக்கோல்தாம்சன்
பிப் 23, 2025 08:25

பண்பட்ட மக்கள் எப்போதும் நல்லதையே நினைப்பர்


Yes your honor
பிப் 23, 2025 11:54

தமிழக மக்கள்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை