| ADDED : மார் 22, 2024 07:06 AM
பெங்களூரு: கேரள உயர் நீதிமன்றத்தில் இருந்து, கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு இடம் மாற்றம் செய்யப்பட்ட அனு சிவராமன், நேற்று பதவி ஏற்று கொண்டார்.கேரளாவின், எர்ணாகுலத்தை சேர்ந்த அனு சிவராமன், எர்ணாகுலம் அரசு சட்ட கல்லுாரியில், 1991ல் சட்ட பட்டப்படிப்பு பெற்றார். 1991ன் மார்ச் 9ல் வக்கீல் கவுன்சிலில் பதிவு செய்து கொண்டு, வக்கீலாக தொழிலை துவக்கினார்.கடந்த 2015 ஏப்ரல் 10ல், கேரள உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2017 ஏப்ரல் 5ல் நிரந்தர நீதிபதியானார். தற்போது இவர், கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.ராஜ்பவனின், மாநாடு ஹாலில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், அனு சிவராமன் பதவி ஏற்றார். இவருக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.