உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதியோருக்கு ஜாதி சான்றிதழ் தலித் அமைப்பினர் முறையீடு

முதியோருக்கு ஜாதி சான்றிதழ் தலித் அமைப்பினர் முறையீடு

தங்கவயல்: 'முதியோருக்கு ஜாதிச் சான்றிதழ் பெறுவதில் குளறுபடி உள்ளது. இதை சரிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தலித் அமைப்பினர் வலியுறுத்தினர்.தலித் மக்கள் குறைதீர்ப்பு முகாம், நேற்று தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா தலைமையில் ராபர்ட்சன்பேட்டையில் உள்ள மினி விதான் சவுதா அரங்கில் நடந்தது.கிராமங்களில் தலித்துகளுக்கு அரசு ஒதுக்கிய இடுகாடு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. புகார் செய்யும்போது, சர்வே செய்கின்றனர்; ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதே இல்லை. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.முன்னாள் துணை பிரதமர் ஜெகஜீவன்ராம் சிலை அமைப்பது; அம்பேத்கர் நினைவு அரங்கம் கட்டுவது; தனியார் பள்ளிகளில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பள்ளிகளில் புத்தகம் உட்பட கல்விக்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தக மையமாகி உள்ளது.வீடற்ற எஸ்.சி.,களுக்கு வீட்டு மனைகள் வழங்கல்; முதியோருக்கு ஜாதிச் சான்றிதழ் பெறுவதில் ஆவணங்கள் கேட்டு இழுத்தடிப்பதால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ரங்கநாதன், பிச்சஹள்ளி மஞ்சுநாத், ஸ்ரீநாத், பாபு உட்பட பலர் பேசினர்,தாசில்தார் நாகவேணி, டி.எஸ்.பி., பாண்டுரங்கா, நகராட்சி ஆணையர் பவன் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.கோரிக்கைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அடுத்த கூட்டத்தில் விவரிப்பதாக, ரூபகலாதெரிவித்தார்.6.7.2024 / ஜெயசீலன்7_DMR_0009தலித்களின் குறைகேட்பு முகாம், தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா தலைமையில் நேற்று நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி