மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
4 hour(s) ago | 1
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
10 hour(s) ago
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
10 hour(s) ago | 2
பெங்களூரு: கர்நாடகாவில் இடைத்தேர்தல் நடக்கும் மூன்று சட்டசபை, ஒரு மேலவை தொகுதிக்கு பா.ஜ., பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஹாவேரி ஷிகாவி பா.ஜ., -- எம்.எல்.ஏ., பசவராஜ் பொம்மை; பல்லாரி சண்டூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., துக்காராம்; ராம்நகர் சென்னப்பட்டணா ம.ஜ.த., -- எம்.எல்.ஏ., குமாரசாமி.தட்சிண கன்னடா - உடுப்பி தொகுதியில் இருந்து, மேலவைக்கு எம்.எல்.சி.,யாக தேர்வு செய்யப்பட்ட கோட்டா சீனிவாஸ் பூஜாரி.இவர்கள் நான்கு பேரும் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி., ஆனதால், எம்.எல்.ஏ., -- எம்.எல்.சி., பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இடைத்தேர்தல் நடக்கவுள்ள நான்கு தொகுதிகளுக்கும், பா.ஜ., நேற்று பொறுப்பாளர்களை நியமித்தது.ஷிகாவி: எதிர்க்கட்சித் தலைவர் அசோக், எம்.எல்.ஏ.,க்கள் அரவிந்த் பெல்லத், மகேஷ் தெங்கினகாயி, மாநில பொதுச் செயலர் ராஜிவ்.சண்டூர்: எம்.பி., கோவிந்த் கார்ஜோள், மாநில பொதுச் செயலர் சுனில் குமார், எம்.எல்.சி.,க்கள் ரவிகுமார், நவீன்.சென்னப்பட்டணா: எம்.எல்.ஏ.,க்கள் அஸ்வத் நாராயணா, கிருஷ்ணப்பா, எம்.எல்.சி., கோபிநாத் ரெட்டி, மாநில பொதுச் செயலர் நந்தீஷ் ரெட்டி.எம்.எல்.சி., இடைத்தேர்தல்: முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, எம்.பி.,க்கள் கோட்டா சீனிவாஸ் பூஜாரி, பிரிஜேஷ் சவுடா, மாநில பொதுச் செயலர் பிரீத்தம் கவுடா.
4 hour(s) ago | 1
10 hour(s) ago
10 hour(s) ago | 2