உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹெப்பால் மேம்பாலம் - சில்க் போர்டு வரை ரூ.12,690 கோடியில் சுரங்க பாதைக்கு ஒப்புதல்

ஹெப்பால் மேம்பாலம் - சில்க் போர்டு வரை ரூ.12,690 கோடியில் சுரங்க பாதைக்கு ஒப்புதல்

பெங்களூரு: பெங்களூரு ஹெப்பால் மேம்பாலம் அருகில் உள்ள எஸ்டீம் மால் முதல் ஓசூர் சாலையின் சில்க் போர்டு சதுக்கம் வரை, 12,690 கோடி ரூபாய் மதிப்பில், சுரங்க பாதை அமைக்க கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.கர்நாடக அமைச்சரவை கூட்டம், துணை முதல்வர் சிவகுமார் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பல்வேறு துறைகள் சம்பந்தப்பட்ட முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.பின், அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து, சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் கூறியதாவது:1. நடப்பாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட, 'ஹொம்பெலகு' திட்டத்தின் கீழ், சோலார் தெரு விளக்குகள் பொருத்துவதற்கு, 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு2. பெங்களூரு நகரில் 250 மீட்டர் உயரம் கொண்ட, 'ஸ்கைடெக்' எனும் வானுயர்ந்த கோபுரம் அமைக்க ஒப்புதல்3. மின்சார பயன்பாட்டை குறைக்கும் வகையில், பெங்., மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தெரு விளக்குகள் எல்.இ.டி., விளக்குகளாக மாற்றப்படும்4. ஹெப்பால் மேம்பாலம் அருகில் உள்ள எஸ்டீம் மால் முதல் ஓசூர் சாலையின் சில்க் போர்டு சதுக்கம் வரை, 12,690 கோடி ரூபாய் மதிப்பில், சுரங்க பாதை அமைக்க ஒப்புதல்5. பெங். மாநகராட்சி எல்லைக்குள், 20 கோடி ரூபாயில் 52 புதிய இந்திரா உணவகங்கள் அமைக்கப்படும்6. பெங்., மாநகராட்சி எல்லைக்குள் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு, நிவாரண நிதி வழங்க நிதி ஒதுக்கப்படும்7. பட்ஜெட்டில் அறிவித்தபடி, 85 கோடி ரூபாய் மதிப்பில், 592 அங்கன்வாடிகள் அமைக்கப்படும்8. கர்நாடக மாநில மினரல்ஸ் வாரியத்தின், குரூப் ஏ மற்றும் பி பிரிவு அதிகாரிகளுக்கு, 4ம் சம்பள கமிஷன்படி, 1998 ஏப்ரல் 1ம் தேதி முதல், 2005 செப்டம்பர் 30ம் தேதி வரை வழங்கப்பட வேண்டிய நிலுவை தொகையை வழங்க முடிவு9. சிறு, குறு தொழில்களை மேம்படுத்தும் வகையில், மத்திய அரசு திட்டங்கள் அமல்படுத்த, 147.87 கோடி ரூபாய் வழங்கப்படும்10. லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனையில் லஞ்சம் வாங்கும் போது சிக்கிய கே.ஏ.எஸ்., அதிகாரி ராஜம்மா சவுடாரெட்டி, பணியில் இருந்து நீக்கப்படுவார்11. ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் சுகாதார திட்டம் உட்பட அனைத்து சுகாதார திட்டங்களையும், டிஜிட்டல் மயமாக மாற்றுவதற்காக, கர்நாடக டிஜிட்டல் சுகாதார சொசைட்டி அமைத்து பதிவு செய்யப்படும்12. ராய்ச்சூர் மாவட்டம், மான்வி தாலுகா, சிக்கலபர்வி கிராமத்தில் துங்கப்தரா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையை, 397.50 கோடி ரூபாயில் மேம்படுத்த முடிவு13. கடந்த 2023 - 24ம் ஆண்டின் மத்திய சாலை மேம்பாட்டு நிதியில், 1,385.60 கோடி ரூபாயை பயன்படுத்தி, 295 பணிகள் மேற்கொள்ள அனுமதி.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஆக 23, 2024 20:47

மற்றொரு செய்தில் ரூ.1,269 கோடி செலவில் பெங்களூருவில் ஹெப்பல் - சில்க் போர்டு ஜங்சன் வரையில் இரட்டைவழி சுரங்கப்பாதை அமைக்கவும் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. ஆனால் இந்த செய்தியில் ரூ. 12,690 கோடி செலவில் சுரங்கப்பாதைக்கு ஒப்புதல் என்று இருக்கிறது. இரண்டு வெவேறு செய்திகள். ஆனால் சுரங்கப்பாதை ஒன்று. செலவு ஒன்றுக்கு ஒன்று முரண்பாடு. திட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பே ஊழலா...?


நிக்கோல்தாம்சன்
ஆக 23, 2024 10:49

அணைகள் , தடுப்பணைகள் என்று கருநாடக முன்னேறுகிறது , சமாதி , பேனா என்று தமிழகம் விடியலை நோக்கி , நீர் சார்ந்த பொருளாதாரத்தை எப்போதுதான் உணர்வார்களா வௌக்குமாறு குச்சிகள்


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ