உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுங்க கட்டணமா கேக்குற...? புல்டோசரை ஏற்றி சாவடி தகர்ப்பு

சுங்க கட்டணமா கேக்குற...? புல்டோசரை ஏற்றி சாவடி தகர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹாப்பூர்: உத்தர பிரதேசத்தில் சுங்க கட்டணம் கேட்டதால், ஆத்திரமடைந்த புல்டோசர் ஆப்பரேட்டர், சுங்கச்சாவடியை தகர்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.உத்தர பிரதேசத்தின் ஹாப்பூர் மாவட்டத்தில் டில்லி - லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் சாஜர்சி சுங்கச்சாவடி இயங்கி வருகிறது.இங்கு, நேற்று காலை புல்டோசர் வாகனத்துடன் வந்த நபர், சுங்கச்சாவடியை கடந்து செல்ல முயற்சித்தார். அப்போது சுங்கச்சாவடி ஊழியர்கள், அவரை இடைமறித்து சுங்க கட்டணம் செலுத்தும்படி கேட்டுள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த புல்டோசர் ஆப்பரேட்டர், திடீரென புல்டோசர் வாயிலாக சுங்கச்சாவடியை தகர்க்க துவங்கினார்.இதில், கட்டணம் வசூலிக்கும் மையங்கள் இடிந்து விழுந்தன. இச்சம்பவத்தை, அங்கிருந்தோர் தங்கள் மொபைல் போனில் வீடியோ எடுத்ததுடன், சமூக வலைதளங்களிலும் பதிவிட்டனர். இது, வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக ஹாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்நபரை கைது செய்து சிறையில் அடைத்ததுடன், புல்டோசரையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

doss
ஜூன் 13, 2024 18:29

அரசு திருந்தவில்லையென்றால் இது போன்ற நிகழ்வுகள் இனிமேல் அதிகம் நிறை வேறும்.மக்கள் கொத்தடிமைகளாக இருக்க மாட்டார்கள்


Ms Mahadevan Mahadevan
ஜூன் 13, 2024 18:14

அந்த நபர் செய்தது தான். ஆனால் சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிப்பது தப்பு காண்ட்ராக்ட் காரர்களு அரசியல் சுக வாசிகளும் சம்பாதிக்க சுங்க சாவடிகள் இதுதான் தப்பு


நிக்கோல்தாம்சன்
ஜூன் 12, 2024 07:16

தமிழக சுங்க சாவடியையும் இது போல இடிக்கும் நாள் எந்நாளோ?


vadivelu
ஜூன் 12, 2024 08:34

உலகெங்கும் அலர்ந்த நாடுகளில் சாலை உபயோகிக்க சுங்க சாவடிகள் இருக்கின்றன, கட்டணம் இருக்கிறது.இன்னும் கொஞ்ச நாட்களில் சுங்க சாவடிகள் மறைந்து போகும், கமெராக்கள் மூலம் சுங்கம் வசூலிக்க படும், காட்டாமல் போனால் பெனல்டியுடன் உங்கள் வீடு தேடி வசூலிப்பார்கள். சிந்தித்து கருது எழுத வேண்டும். அது எதுவோ மத்திய அரசின் திட்டம் என்று நினைக்க கூடாது.


Anantharaman Srinivasan
ஜூன் 11, 2024 23:26

பணம் கொடுக்காமல் கடைகளை அடித்து உடைப்பவர்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல... சட்டம் ஒழுங்கை மீறி வன்முறையில் இறங்குபவர்கள் உத்தர பிரதேசத்திலும் இருப்பபது தெரிகிறது.


vadivelu
ஜூன் 12, 2024 08:35

அங்குதான் அதிகமாக வளர்க்க பட்டு விட்டார்கள்.


Kumar
ஜூன் 12, 2024 11:26

தமிழகத்துல வேல செஞ்சிருப்பானோ


NAGARAJ THENI KALPAKKAM
ஜூன் 11, 2024 23:20

சரியான செயல்.


ganapathy
ஜூன் 12, 2024 03:26

நீ ஒரு அறிவீலி


sankaranarayanan
ஜூன் 11, 2024 22:59

அந்த புல்டோசரை வெளியிலே விற்று அந்த தொகையை வைத்து திரும்பவும் அதே இடத்தில் அதே மாதிரியான சுங்கச்சாவடியை அரசு கட்டிமுத்தால்தான் இனி இது போன்று மக்கள் பணம் வீணாகாது செய்வார்களா


மேலும் செய்திகள்





புதிய வீடியோ