உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லடாக்கில் ராணுவ டாங்கி விபத்தில் சிக்கியது: 5 வீரர்கள் மரணம்

லடாக்கில் ராணுவ டாங்கி விபத்தில் சிக்கியது: 5 வீரர்கள் மரணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லே: லடாக் எல்லையில் ராணுவ பயிற்சியின் போது டாங்கி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு, 5 வீரர்கள் உயிரிழந்தனர். லடாக் அருகே சீன எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்கள் ஆற்றைக் கடக்கும் பயிற்சி மேற்கொண்டனர். அப்போது ஆற்றில் திடீரென நீர்மட்டம் உயர்ந்ததால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 5 ராணுவ வீரர்கள் தண்ணீர் அடித்து செல்லப்பட்டனர். ஐந்து பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ut8bm6i1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதிகாலை 3 மணிக்கு ஆற்றைக் கடக்கும் பயிற்சி நடந்தது. லேயில் இருந்து 148 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மந்திர் மோர்க்கு அருகில் உள்ள ஆற்றைக் கடந்து, டாங்கி சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Apposthalan samlin
ஜூன் 29, 2024 17:59

உலகில் தொழில் நுட்ப்பம் அதி வேகமாக உயர்ந்து உள்ளது இந்த உயிர் பலி தொழில் நுட்ப்பதில் எவ்வளுவு பின் தங்கி இருக்கோம் என்பது தெளிவாக தெரிகிறது


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 30, 2024 08:44

எந்த நதி ? எந்த நாட்டு நதி ? மொபைல் / இணைய தொழில்நுட்பங்களை அங்கே கையாளுவதில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கலாம் .... அரைகுறையாக அறிந்து கொண்டு பிதற்றக் கூடாது .....


Saravanakumar c
ஜூன் 29, 2024 15:30

வீர வணக்கம்.


Kandhavel
ஜூன் 29, 2024 15:00

வீர வணக்கங்கள் ஆன்மா இறைவனடி சேரட்டும்


subramanian
ஜூன் 29, 2024 14:42

அவர்கள் ஆன்மா சாந்தியடைய ஆண்டவன் அருள் புரியட்டும். இது சதியாக இருக்க வாய்ப்பு அதிகம்.


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 29, 2024 13:09

தியாகிகளுக்கு வீர வணக்கங்கள் ....


rasaa
ஜூன் 29, 2024 12:09

நமது வீரர்களுக்கு வீர வணக்கமும், அஞ்சலியும். அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும். வீரர்களின் குடும்பத்தினரை அரசு தக்க முறையில் காக்கவேண்டும்.


ஜூன் 29, 2024 12:09

சில வருடங்களுக்கு பிறகு தலைவர்கள் பிறந்ந்தநாள் காரணமாக விடுதலை. மரண தண்டனைதான் கட்டுபடுத்த முடியும்


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 29, 2024 13:10

என்ன சொல்றீங்க ..... செய்திப்படி விபத்து ......


சமீபத்திய செய்தி