மேலும் செய்திகள்
பெரும் அவமானம்!
2 hour(s) ago | 1
பீஹார் சட்டசபை தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டி!
2 hour(s) ago | 1
தலைமை நீதிபதியை தாக்க முயற்சி சுப்ரீம் கோர்ட் அறையில் அதிர்ச்சி
3 hour(s) ago | 1
மும்பை: கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் இருந்து, மேற்காசிய நாடான பஹ்ரைனுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் விமானம் சமீபத்தில் புறப்பட்டது.இதில் பயணித்த கேரளாவைச் சேர்ந்த அப்துல் முசாவிர் நடுகண்டே, 25, என்ற பயணி, விமானம் புறப்பட்டதும், பின்புறம் இருந்த விமான ஊழியர்களை தாக்கினார். இதையடுத்து, விமானத்தின் கதவை அவர் திறக்க முயன்றார். ஒருவழியாக அவரை சமாதானப்படுத்தி, இருக்கையில் விமான ஊழியர்கள் அமர வைத்தனர். எனினும் அவர், விமானத்தின் கதவை திறக்கப் போவதாக தொடர்ந்து மிரட்டல் விடுத்தபடியே வந்தார். இதையடுத்து, மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள விமான நிலையத்தில், விமானத்தை விமானி அவசரமாக தரையிறக்கினார். இது குறித்து விமான ஊழியர்கள் அளித்த புகாரின்படி வழக்குப் பதிவு செய்த போலீசார், அப்துல் முசாவிர் நடுகண்டேவை கைது செய்தனர்.மற்றொரு சம்பவம்: டில்லியில் இருந்து மும்பைக்கு, ஆகாசா ஏர் நிறுவனத்தின் விமானம் நேற்று புறப்பட்டது. அப்போது, விமானத்துக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, குஜராத்தின் ஆமதாபாதுக்கு விமானம் திருப்பி விடப்பட்டது. இந்த விமானத்தில், 186 பயணியர் இருந்தனர்.
2 hour(s) ago | 1
2 hour(s) ago | 1
3 hour(s) ago | 1