மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
6 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
6 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
6 hour(s) ago
இடாநகர்: அருணாசல பிரதேசத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பா.ஜ., சார்பில் போட்டியிட்ட நான்கு பெண் வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.அருணாச்சல பிரதேச மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 60 இடங்களில், ஆளும் பா.ஜ., 46 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.தேர்தலில் மொத்தம் உள்ள 60 இடங்களில் ஆளும் பா.ஜ., சார்பில் 4 பெண்களும் காங்., சார்பில் 3 பெண்கள் சுயேட்சையாக பெண் ஒருவர் என மொத்தம் எட்டுபேர் போட்டியிட்டனர். இதில் பா.ஜ., சார்பில் போட்டியிட்ட நான்கு பெண்களும் வெற்றி பெற்றுள்ளனர். மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கலிகோ பூலின் மனைவியான தசாங்லுபுல் ஹயுலியாங் தொகுதியில் போட்டியிட்டுவென்றுள்ளார், இவர் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறுவது இது மூன்றாவது முறையாகும். இவர் உட்பட மேலும் மூன்று பேர் என நான்கு பெண்களும் வெற்றி பெற்றுள்ளனர்.
6 hour(s) ago | 1
6 hour(s) ago
6 hour(s) ago