உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உதவி தற்காலிக சபாநாயகர் பொறுப்பு: இந்தியா கூட்டணி நிராகரிப்பு

உதவி தற்காலிக சபாநாயகர் பொறுப்பு: இந்தியா கூட்டணி நிராகரிப்பு

புதுடில்லி: லோக்பாவில் உதவி தற்காலிக சபாநாயகர் பொறுப்பை இந்தியா கூட்டணி நிராகரிப்பதாக பார்லி விவகாரத்துறைக்கு இந்தியா கூட்டணிக்கட்சிகள் கடிதம் எழுதி உள்ளது.இது குறித்து கூறப்படுவதாவது: நடந்துமுடிந்த பொது தேர்தலுக்கு பின்னர் லோக்சபாவின் முதல் கூட்டம் நாளை (24.06.2024) துவங்குகிறது.புதிய உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகரான பா.ஜ., எம்.பி., பார்த்ருஹரி மகதப் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். பதவிப்பிரமாணத்தின் போது உதவி செய்யும் வகையில் டி.ஆர்.பாலு ,சுதீப் பந்தோபாத்தியாயா உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டனர். இதனிடையே காங்., உறுப்பினர் கொடிக்குன்னில் சுரேஷ் தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யவில்லை எனவும்கொடிக்குன்னில் சுரேஷ் புறக்கணிக்கப்பட்டது விதிமுறை மீறல் என இந்தியா கூட்டணி கடும் கண்டனம் தெரிவித்து உதவி தற்காலிக சபாநாயகர் பொறுப்பை நிராகரிப்பதாக தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

subramanian
ஜூன் 23, 2024 22:32

எதற்கு எடுத்தாலும் பிரச்சனை செய்ய ஆரம்பித்து விட்டார்கள். வெளிநடப்பு, கூச்சல் குழப்பம் செய்பவர்கள் சம்பளம் பிற படிகள் நிறுத்தி விட்டு பார்க்க வேண்டும்


சோலை பார்த்தி
ஜூன் 23, 2024 22:25

நல்ல வேளை. . .நீங்களும் நல்லவஙக னு தப்பா நினைச்சுட்டேன்....நீங்க எப்பவும் போலவே தரம் கெட்டவங்கனு நிருபிச்சுட்டிங்க. . .


ஆரூர் ரங்
ஜூன் 23, 2024 22:14

தொடர்ந்து நீண்ட காலமாக MP யாக இருந்தவர்தான் தாற்காலிக சபாநாயகராக நியமிக்கப்படுவார். ஆனால் புள்ளிராஜா கூட்டணி விரும்பும் சுரேஷ் இடையில் ஆறாண்டு காலம் எம்பியாக இல்லை..எனவே தகுதியற்றவர் ஆகி விட்டார்


Barakat Ali
ஜூன் 23, 2024 23:15

காங்கிரஸ் மிதமிஞ்சிய வெறுப்பிலும், விரக்தியிலும் உள்ளது ......... அதுதான் காரணம் ......


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை