மேலும் செய்திகள்
விழிப்புணர்வு ஊர்வலம்
11 hour(s) ago
காசா பிளாங்காவில் பேஷன் ஷோ
11 hour(s) ago
பீதர் : பீதரில் போட்டியிடும் மத்திய அமைச்சர் பகவந்த் கூபாவை ஆதரித்து, பா.ஜ., - எம்.எல்.ஏ., பிரபு சவுஹான் பிரசாரம் செய்வாரா என்பது குறித்து, இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.பீதர் தொகுதி எம்.பி.,யாக இருப்பவர் பகவந்த் கூபா. மத்திய உரம், ரசாயன துறை இணை அமைச்சராக உள்ளார். இவருக்கும், பீதரின் அவுராத் தொகுதி பா.ஜ., -எம்.எல்.ஏ., பிரபு சவுஹானுக்கும் இடையில், மோதல் போக்கு உள்ளது.பகவந்த் கூபாவுக்கு தேர்தலில் போட்டியிட, சீட் தரக்கூடாது என, மாநில தலைவர் விஜயேந்திரா காலில், பிரபு சவுஹான் விழுந்தார். ஆனாலும் எந்த பயனும் இல்லை. பகவந்த் கூபாவே வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.அவரை வேட்பாளராக அறிவித்த அன்றே, பிரபு சவுஹானுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வீடு திரும்பினார். அதன் பின்னர் அவர் பற்றி, எந்த தகவலும் இல்லை.பகையை மறந்து பகவந்த் கூபாவுக்கு, ஆதரவாக பிரசாரம் செய்வாரா அல்லது காங்கிரஸ் வேட்பாளர் சாகர் கன்ட்ரேயை மறைமுகமாக ஆதரிப்பாரா என்று தெரியவில்லை. அவரது நிலைப்பாடு என்ன என்பது மர்மமாகவே உள்ளது.
11 hour(s) ago
11 hour(s) ago