உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ.,வில் இருந்து எம்.பி., பச்சே கவுடா ஓட்டம் வாய்ப்புக்கு நன்றி சொல்லி விடை பெற்றார்

பா.ஜ.,வில் இருந்து எம்.பி., பச்சே கவுடா ஓட்டம் வாய்ப்புக்கு நன்றி சொல்லி விடை பெற்றார்

சிக்கபல்லாப்பூர்: சிக்கபல்லாப்பூர் தொகுதி பாஜ., - எம்.பி., பச்சேகவுடா, கட்சியில் இருந்து விலகி உள்ளார். 'மக்கள் பணியாற்ற வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி' என்று, ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.சிக்கபல்லாப்பூர் தொகுதி பா.ஜ., - எம்.பி., பச்சேகவுடா, 81. தேர்தல் அரசியலில் இருந்து, ஓய்வு பெறுவதாக கடந்த ஆண்டே அறிவித்தார். கட்சியில் அவர் நீடிப்பார் என்று, பா.ஜ., தலைவர்கள் கூறி வந்தனர்.

கடிதம்

இந்நிலையில் பா.ஜ.,வில் இருந்து விலகுவதாக, கட்சியின் தலைவர் விஜயேந்திராவுக்கு, பச்சேகவுடா நேற்று கடிதம் அனுப்பி உள்ளார்.அந்த கடிதத்தில், 'கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து, தானாக முன்வந்து ராஜினாமா செய்கிறேன். எனது ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளுங்கள். 'கடந்த 2008ல் கட்சியில் இணைந்தேன். எம்.எல்.ஏ., அமைச்சர், எம்.பி., பதவி கொடுத்து, மக்கள் பணியாற்ற வாய்ப்பு அளித்ததற்கு நன்றி. 'எனக்கு ஒத்துழைப்பாக இருந்த, அனைத்து மூத்த தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்' என்று குறிப்பிட்டு உள்ளார்.பச்சேகவுடா தனது அரசியல் வாழ்க்கையை, ஜனதா கட்சியில் இருந்து தொடங்கியவர். கடந்த 1978ல் ஹொஸ்கோட் தொகுதியில் இருந்து முதல்முறை எம்.எல்.ஏ., ஆனார். அதன்பின்னர் 1985ல் இரண்டாவது முறை வென்றார். பின்னர் 1999, 2004 தேர்தல்களில் ம.ஜ.த., சார்பில் எம்.எல்.ஏ., ஆனார். அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்து, 2008 தேர்தலில் வென்றார்.

மகன் எம்.எல்.ஏ.,

கடந்த 2014 லோக்சபா தேர்தலில், சிக்கபல்லாப்பூர் தொகுதியில் தோற்றார். ஆனால் 2019 தேர்தலில், முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லியை தோற்கடித்து வெற்றி பெற்றார். பச்சேகவுடாவின் மகன் சரத் பச்சேகவுடா, ஹொஸ்கோட் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக உள்ளார். இவர் முன்பு பா.ஜ.,வில் இருந்தவர். கடந்த 2019 ல் நடந்த இடைத்தேர்தலில், பா.ஜ., சீட் கிடைக்காததால், சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் காங்கிரசில் இணைந்து கடந்த ஆண்டு நடந்த தேர்தலிலும், வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ