உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பள்ளிகளில் ஸ்மார்ட் வாட்ச்களுக்கு தடை; தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கை

பள்ளிகளில் ஸ்மார்ட் வாட்ச்களுக்கு தடை; தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கை

பெங்களூரு : 'சமீப நாட்களாக பள்ளி சிறார்கள், 'ஸ்மார்ட் வாட்ச்' பயன்படுத்துகின்றனர். இது தவறான பழக்கம். இதை கட்டுப்படுத்த வேண்டும்' என, தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளன.பள்ளி மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்துவது அதிகரிக்கிறது. மாநிலத்தில் கொரோனா தொற்று தீவிரமாக இருந்த போது, பல மாதங்கள் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. மாணவர்களின் கல்வி பாதிக்க கூடாது என்பதால், ஆன்லைன் வகுப்புகள் நடத்த அரசு அனுமதி அளித்தது. பாடம் கேட்பதற்காக பெற்றோர், தங்கள் மொபைல் போனை பிள்ளைகளுக்கு கொடுத்தனர். சில பெற்றோர் புதிதாக ஸ்மார்ட் போன் வாங்கி கொடுத்தனர்.பள்ளி சிறார்கள் வகுப்புகளுக்கு மட்டும் பயன்படுத்தாமல், மொபைல் போன் கேம்களுக்கு அடிமையாகினர். இது அவர்களின் மனம், உடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது என, வல்லுனர்கள் எச்சரித்தனர். அது மட்டுமின்றி, ஆபாச போட்டோக்கள், வீடியோக்களை பார்க்கின்றனர். இதை தீவிரமாக கருதிய அரசு, பள்ளிகளில் சிறார்கள் மொபைல் போன் கொண்டு வர, பயன்படுத்த தடை விதித்தது.இப்போது மொபைல் போனுக்கு பதிலாக, ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்த துவங்கியுள்ளனர். வகுப்புகளில் ஆசிரியர்கள் கேட்கும் கணித கேள்விகளுக்கு மாணவர்கள் டிஜிட்டல் வாட்சை பார்த்து, பதில் அளிக்கின்றனர். மூளையை பயன்படுத்துவதில்லை. கணிதம் மட்டுமின்றி அனைத்து கேள்விகளுக்கும், கூகுளில் பதில் தேடுகின்றனர்.மாணவர்கள் மொபைல் போனில் செய்யும், அனைத்து பணிகளை டிஜிட்டல் வாட்ச் மூலமாக செய்கின்றனர். இதன் பின்விளைவுகளை கருதி சில பள்ளிகள், இதற்கு தடை விதித்தன. மாணவர்கள் டிஜிட்டல் வாட்ச் அணிந்து வரக்கூடாது. அணிந்து வந்தால் வகுப்புக்குள் அனுமதி இல்லை என, எச்சரித்துள்ளன. இந்த விதிமுறையை அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்த வேண்டும் என, வலியுறுத்தல் எழுந்துள்ளது.இது குறித்து, தனியார் பள்ளிகள்கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கை:பள்ளி சிறார்கள் டிஜிட்டல் வாட்ச் அணிவதற்கு, கல்வித்துறை தடை விதிப்பது கட்டாயம். இதை பயன்படுத்துவதால், பள்ளி சூழ்நிலை மாறும். மாணவர்களின் மனம், உடல் ஆரோக்கியம் பாதிப்படையும்.எப்போதும் டிஜிட்டல் வாட்ச்சில் கேம் விளையாடுவதால், அவர்களுக்கு கல்வியில் ஆர்வம் குறையும். சிறார்கள் தவறான பாதையில் செல்ல வழி வகுக்கும். இதை மனதில் கொண்டு, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை