உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரபல பாலிவுட் நடிகரின் பெயரை விளம்பரத்துக்கு பயன்படுத்த தடை

பிரபல பாலிவுட் நடிகரின் பெயரை விளம்பரத்துக்கு பயன்படுத்த தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப்பின் பெயர், குரல், படம் உள்ளிட்டவற்றை விளம்பரங்களுக்காக பயன்படுத்துவதற்கு தடை விதித்து டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்து வருகிறார், பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப்.

புகார்

சில அமைப்புகள், சமூக வலைதளங்கள் உள்ளிட்டோர், தன் பெயர், படம், குரல் உள்ளிட்டவற்றை விளம்பரத்துக்கு பயன்படுத்துவதை எதிர்த்து, அவர் டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.இதை விசாரித்த உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுஉள்ளதாவது:ஜாக்கி ஷெராப்பின் பெயர், புனைப்பெயர், படம், குரல் உள்ளிட்டவற்றை, விளம்பரங்களுக்காக பயன்படுத்த, சில அமைப்புகள் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது.அதே நேரத்தில் சில யுடியூப் சேனல்கள் மீதும் இதுபோன்ற புகார் கூறப்பட்டுள்ளது. யுடியூப், மீம்ஸ் போன்றவை, கிண்டல், கேலி, விமர்சனமாக உள்ளன. யுடியூபர் என்பது தற்போது வளர்ந்து வரும் ஒரு சமூகமாக மாறியுள்ளது. இதற்கு பார்வையாளர்கள் அதிகம் உள்ளனர். மேலும், இது சிலருக்கு வருவாயையும் உருவாக்கி தருகிறது. இளைஞர்கள் உட்பட சிலர், இந்த வருவாயையே நம்பியுள்ளனர்.

விசாரணை

அதனால், யுடியூப் சேனல்களில் வெளியிடப்படும் வீடியோக்களுக்கு தடை விதிப்பது தொடர்பாக, விசாரிக்க வேண்டியுள்ளது. இது தொடர்பாக, மத்திய அரசின் தொலைத் தொடர்பு துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை பதிலளிக்க வேண்டும். வழக்கின் விசாரணை, அக்., 15க்கு ஒத்திவைக்கப்படுகிறது.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை