உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஞ்சாப் அணியை 4 விக்கெட்டுகளில் வீழ்த்தியது பெங்களூரு

பஞ்சாப் அணியை 4 விக்கெட்டுகளில் வீழ்த்தியது பெங்களூரு

பெங்களூரு: பெங்களூரு அணி,4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. இந்தியாவில் 17வது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. பெங்களூருவில் நடந்த லீக் போட்டியில் பஞ்சாப், பெங்களூரு அணிகள் மோதின.டாஸ் வென்ற பெங்களூரு அணி, பீல்டிங் தேர்வு செய்தது.முதலில் விளையாடிய பஞ்சாப் அணியின் துவக்க வீரர்களாக ஷிகர் தவான் 45 ரன்களும் ஜானி பேர்ஸ்டோவ் 8 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். ஜிதேஸ் சர்மா 27 ரன்களும் சாம் கரன் 23 ரன்களும் எடுத்தனர்.பிரசிம்ரன்சிங் 25 ரன்கள் எடுத்தார். ஷஷங்க் சிங் ஆட்டமிழக்காமல் 21 ரன் எடுத்தார். 20 ஓவரின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது.சிராஜ், மேக்ஸ்வல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.177 ரன்கள் வெற்றி இலக்காகக்கொண்டு அடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி, 19.2 ஓவரில் 178 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணியின் விராத் கோஹ்லி அதிரடியாக 77 ரன்கள் சேர்த்தார். தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 28 ரன்களும் மஹிபால் லோம்ரர் 17 ரன்களும் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ