உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வேஷ்டி கட்டிய விவசாயியை அனுமதிக்க மறுத்த வணிக வளாக பாதுகாவலர்கள்

வேஷ்டி கட்டிய விவசாயியை அனுமதிக்க மறுத்த வணிக வளாக பாதுகாவலர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: வணிக வளாகத்தில் வேஷ்டி கட்டி வந்ததற்காக உள்ளே அனுமதிக்க மறுத்த பாதுகாவலர்களுக்கு இணையதளவாதிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து அவர்கள் மன்னிப்பு கோரினர்.கர்நாடக மாநிலம் பெங்களூருவில் செயல்படும் ஜிடி மால் என்ற வணிகவளாகத்தில் உள்ள திரையரங்கிற்கு வயது முதிர்ந்த விவசாயி ஒருவர், மகனுடன் வந்தார். அந்த முதியவர் வேஷ்டி அணிந்து இருந்தார். வாசலில் அவரை தடுத்து நிறுத்திய பாதுகாவலர்கள், வேஷ்டி கட்டி வந்தால் உள்ளே செல்ல அனுமதிக்க முடியாது எனக்கூறி திருப்பி அனுப்பினர். பேன்ட் அணிந்து வந்தால் உள்ளே செல்லலாம் என்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vwfzrzc9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாக பரவ துவங்கியது. இதனை பார்த்த நெட்டிசன்கள் கடுமையாக விமர்சிக்க துவங்கினர். வணிக வளாகம் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனையடுத்து பாதுகாவலர்கள் தங்களது செயலுக்கு மன்னிப்பு கோரி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Sankara Subramaniam
ஜூலை 18, 2024 10:31

Why are you allowing ladies with 1/4,1/2 size trousers unaccep dress in public places. At least the poor person cane with veshti n shirt.


Kumar Kumzi
ஜூலை 18, 2024 00:09

அப்போ குல்லா பர்தா தான் போட்டுட்டு வரணுமாடா


Barakat Ali
ஜூலை 17, 2024 19:26

வேட்டி தென்னிந்தியர்களின் உடை மட்டுமன்று .... அது இந்தியர்களின் உடை ..... அணியும் விதத்தில் வேறுபாடுகள் இருந்தாலும் அது இந்தியர்களின் உடையே .....


முருகன்
ஜூலை 17, 2024 18:48

நாட்டில் இன்று விவசாயிகள் நிலை இதுதான்


Muthusubramanian
ஜூலை 17, 2024 18:00

காவலர்கள் மன்னிப்பு கேட்டது இருக்கட்டும் ஆனால் அந்த விவசாயி பட்ட அவமானத்திற்கும் மன அழுத்தத்திற்கும் யார் சமாதானம் சொல்வது.


Mohan
ஜூலை 17, 2024 17:28

என்னய்யா அநியாயம் ? மிக மிக அசிங்கமாக கால்களில் அடர்ந்த முடியுடன் எந்த வயசானாலும் அரைக்கால் டவுசர் போட்டு கோயில் முதற்கொண்டு எங்கு வேண்டுமானாலும் வளைய வரும் ஆட்களை பார்த்து அருவருப்பாக உள்ளது. இவனுங்க என்னடான்னா வேஷ்டி கட்டுனவனை சினிமா பாக்க விட மாட்டாராம் . எவனோ அதி புத்திசாலி செக்யூரிட்டி.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 17, 2024 17:11

வைகோ போன்றவர்களுக்கு அரசியல் செய்ய விஷயம் கிடைச்சிருச்சு ..... அவர்தான் ஆளையே காணோம் .....


Ramesh Sargam
ஜூலை 17, 2024 17:02

காவலர்களே , வணிக வளாக முதலைகளே, நீங்கள் தினமும் சாப்பிடும் சாப்பாடு அவர்கள் விளைவிக்கும் பொருட்கள். அவர்கள் விளைவிக்கும் பொருட்கள் வேண்டும், ஆனால் அவர்கள் வேண்டாம். என்னடா நியாயம் இது?


J.Isaac
ஜூலை 17, 2024 18:40

விவசாயிகள்,நாட்டிற்கே தேவையற்றவர்கள் போல, விவசாய நிலங்கள் எல்லாம் ,தொழில் அபிவிருத்தி என்று கார்ப்பரேட்களுக்கு தாரை வார்க்கப்படுகிறதே


Bala
ஜூலை 17, 2024 16:27

திராவிடிய மாதிரியின் ஒரு பகுதி


D.Ambujavalli
ஜூலை 17, 2024 16:23

ஆண்பெண் பேதமின்றி அரைக்கால் டவுசரும், இன்னும் நாகரிகம் என்ற பெயரில் உடல் எல்லாம் காட்டிக் கொண்டு வந்தால் விடுவார்கள் வேஷ்டி காட்டியவர் மாலில் திரைப்படம் பார்க்கக்கூடாது என்று சட்டம் இருக்கிறதா ?


மேலும் செய்திகள்













முக்கிய வீடியோ