உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா குறித்து பைடன் விமர்சனம்: ஜெய்சங்கர் பதிலடி

இந்தியா குறித்து பைடன் விமர்சனம்: ஜெய்சங்கர் பதிலடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியாவில் அன்னியர்கள் மீது வெறுப்பு அதிகமாகி உள்ளது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறிய கருத்தை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுத்துள்ளார். '' இந்திய சமூகம் எப்போதும் பிற சமூக மக்களுக்கு கதவைத் திறந்தே வைத்துள்ளது'' என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடன், '' புலம்பெயர்ந்தவர்களால் அமெரிக்க பொருளாதாரம் வளர்கிறது. சீனா பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டது ஏன்? ஜப்பான் பொருளாதாரம் தள்ளாடுவது ஏன்? ரஷ்யாவும், இந்தியாவும் தடுமாறுவது ஏன்? அந்நாடுகள் அன்னியர்களை வெறுக்கிறது. இதனால், அந்நாடுகளின் வளர்ச்சியைத் தடுக்கிறது'' என விமர்சனம் செய்து இருந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=se88tcoj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

தனித்துவமான நாடு

இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: இந்தியா எப்போதுமே ஒரு தனித்துவமான நாடு. உலக வரலாற்றிலேயே பல்வேறு சமூகங்களை இந்தியா திறந்த மனதுடன் வரவேற்றிருக்கிறது.

குடியுரிமை திருத்தச் சட்டம்

பல்வேறு சமூகங்களில் உள்ள பல்வேறு மக்களும் இந்தியா வந்துள்ளனர். அதனால் தான் எங்களிடம் குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளது. இதன் மூலம் சிக்கலில் உள்ள மக்களுக்கு இந்தியாவின் கதவு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

subramanian
மே 04, 2024 22:36

சனாதன தர்மம் எல்லோரையும் நேசிக்கின்ற இயல்பு உடையது மற்ற நாடுகள் வெறுப்பு உமிழ்ந்து உள்ளது


sri
மே 04, 2024 21:51

அமெரிக்க தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் கத்தோலிக்க மதத்தலைவர்கள் சொல்றபடி தான் நடக்க வேண்டும்


Syed ghouse basha
மே 04, 2024 21:10

ஆமா நிங்க செய்யுற தவறை உள்ளூர் காரன் சுட்டி காட்டினா தேசதுரோகினு சொல்வீங்க வெளியூர் காரன் சொன்னா இது உள் நாட்டு பிரச்னை வெளிநாட்டுகாரன் இதில் தலையிட கூடாதுனு சொல்வீங்க அப்போ யார் தான் உங்க தவறை சுட்டிகாட்டுவது?


தேவராஜ்
மே 04, 2024 18:42

பாவம் பைடன். இந்தியாவிலெ ஒரு ஜாதிக்கு அதை விட கீழ் ஜாதி ஆளுங்க மேலே எவ்ளோ வெறுப்பு இருக்குன்னு தெரியலை.


MADHAVAN
மே 04, 2024 17:49

பிஜேபி கு ஆப்பு ரெடி,


கண்ணன்,மேலூர்
மே 04, 2024 17:16

இதுக்கு இவ்வளவு பதிலடி


P R ravi
மே 04, 2024 17:06

பதவிக்கால முடியும் தருவாயில் ஜோ பைடன் ஏன் பல்டி அடிக்கிறாரு வயதாகி விட்டதா இல்லை வாய்ப்பு குறைந்து விட்டதா?? இத்தனை நாள் மூடி இருந்த வாய் இப்போது திறக்க காரணம் அதுவும் இந்தியாவிற்கு எதிராக இந்தியா எப்போதுமே ஒரு சிறந்த திறந்த புத்தகம்


Sankar Ramu
மே 04, 2024 16:48

மெக்சிகோ பார்டரில் எத்தனை பேர் தினமும் நிக்கிறார்கள் அவர்களை வரவேற்க்க எப்போது பைடன் போகிறார்?


krishnan
மே 04, 2024 16:26

keep ur doors for china , middle east, migrants In years locals will b safe US citizens must give priority to Their own citizens etc


Godfather_Senior
மே 04, 2024 16:22

ஜோ பைடனுக்கு அதிக வயசாயிடுச்சி கொஞ்சம் சித்தம் தடுமாறுது தள்ளாடி பல இடங்களில் விழுந்தார், அதுவும் பலமுறை இனிமேல் ஜெயிக்கவும் வாய்ப்பில்லை பப்பு சித்தந்தங்களை பின்பற்றினால் ஓட்டு விழும் என்று கனவு காண்கிறாரோ என்னவோ


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ