உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசு வேலை, 12 லட்சம் பேருக்கு: ஆட்சியை காக்கும் வழி, நிதீஷ் குமாருக்கு!

அரசு வேலை, 12 லட்சம் பேருக்கு: ஆட்சியை காக்கும் வழி, நிதீஷ் குமாருக்கு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற, இப்போதே தேர்தல் வேலையை முதல்வர் நிதீஷ் குமார் துவக்கிவிட்டார். தற்போது, அவர் 12 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.மொத்தம், 243 எம்.எல்.ஏ.,க்களை கொண்டுள்ள பீஹார் சட்டசபை, வரும் 2025ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது ஆட்சியில், முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. வரும் சட்டசபையில் தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைக்க நிதீஷ் குமார் களத்தில் இறங்கியுள்ளார். தற்போது அவர் 12 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார்.

இளைஞர்கள்

அவர் கூறியதாவது: கடந்த தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற தனது அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்ற வாக்குறுதி படி, 5.16 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. 2 லட்சம் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடந்து முடிந்துள்ளன. வரும் சட்டசபை தேர்தலுக்குள், 10 லட்சத்திற்கு பதிலாக 12 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்க பீஹார் அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு நிதீஷ் குமார் கூறினார். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற, இளைஞர்களின் ஓட்டை கவரும் முயற்சியில் நிதீஷ் குமார் களத்தில் இறங்கியுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kumar Kumzi
ஆக 16, 2024 18:11

எங்க அண்டப்புளுகன் விடியாத விடியல் ஒவ்வொரு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருவேன்னு பொய் வாக்குறுதி கொடுத்து பதவிக்கு வந்தான் ஓட்டு போட்டவர்களிடம் கேட்டு பாருங்கள் எத்தனை பேருக்கு அரசு வேலை தந்தான் என்று


sami
ஆக 16, 2024 13:26

Socialism for votes will destroy Indian economy. Every state every party do this "free money" to lure votes funded by the tax payers


Balasubramanian
ஆக 16, 2024 12:18

டகா டக் சாத்தியம் என்றால் (மகளிருக்கு மட்டுமே ரூ 50 லட்சம் கோடி, சமீபத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா அம்மா சமர்பித்த பட்ஜெட்டில் வரி மற்றும் இதர வருவாய் ரூ 38 லட்சம் கோடி தான்) இதுவும் சாத்தியம்! என்ன ஒரு ஆள் சம்பளம் மற்றும் இதர படிகள் மாதம் ரூ 30000 என்றால் வருடத்திற்கு புதிய நபர்கள் சம்பள செலவு மட்டுமே ரூ 4 லட்சத்து 32 ஆயிரம் கோடி ஆகும்! ஜுஜுபி!


Ramesh Sargam
ஆக 16, 2024 11:59

12 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலையா? அது எப்படி சாத்தியம்? சத்தியமா இது ஒரு அண்டப்புளுகு தேர்தல் வாக்குறுதி. அப்படி என்றால் இப்பொழுது அரசுப்பணியில் ஒருவர்கூட இல்லையா? எப்படியெல்லாம் மக்களை ஏமாற்றுகிறார்கள் இந்த அரசியல்வாதிகள். நீதிமன்றம் உடனே குறுக்கிட்டு நிதிஷுக்கு புத்திமதி சொல்லவேண்டும், இப்படி மக்களை ஏமாற்றவேண்டாம் என்று.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ