உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பைக் டாக்ஸி ஓட்டுனர் கொலை காவல் நிலையம் முற்றுகை

பைக் டாக்ஸி ஓட்டுனர் கொலை காவல் நிலையம் முற்றுகை

சங்கம் விஹார்: அண்ணன் கொலைக்கு பழிவாங்க பைக் டாக்சி ஓட்டுனரை நால்வர் கொடூரமாக கொலை செய்தனர்.தெற்கு டில்லியின் சங்கம் விஹார் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணி அளவில், 24 வயது வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று, சடலத்தைக் கைப்பற்றி விசாரணையை துவக்கினர். சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் நான்கு பேரை போலீசார் அடையாளம் கண்டனர்.முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டது லக்கி, 24, என்பதும் அவர் பைக் டாக்ஸி ஓட்டுனர் என்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:கடந்த 2015ல் சிவம் என்ற இளைஞரை லக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு பழிவாங்க சிவத்தின் சகோதரர்கள், லக்கியை கொலை செய்ததாக சந்தேகிக்கிறோம்.சன்னி என்ற இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யக்கோரி, சங்கம் விஹார் காவல் நிலையத்தை லக்கியின் குடும்பத்தினரும் உறவினர்களும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ