உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரியல் எஸ்டேட் நிறுவனம் போல் செயல்படும் பா.ஜ.,: அகிலேஷ் கடும் தாக்கு

ரியல் எஸ்டேட் நிறுவனம் போல் செயல்படும் பா.ஜ.,: அகிலேஷ் கடும் தாக்கு

புதுடில்லி: 'பா.ஜ., ரியல் எஸ்டேட் நிறுவனம் போல் செயல்படுகிறது' என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.அவர் சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், '' பா.ஜ., உறுப்பினர்களின் நலனுக்காக நிலத்தை விற்க மசோதாவை திருத்த முயற்சி நடக்கிறது. பா.ஜ., ரியல் எஸ்டேட் நிறுவனம் போல் செயல்படுகிறது. வக்பு சட்டம் 1955ன் விதிகளை திருத்த முற்படும் மசோதா வெறும் ஒரு சாக்கு தான்.

வக்பு வாரியநிலங்கள் !

ரயில்வே சொந்தமான நிலங்களை விற்பதே பா.ஜ.,வின் ஒரே இலக்கு. பா.ஜ., தன்னை பாரதிய ஜமீன் கட்சி என்று பெயர் மாற்றிக் கொள்ள வேண்டும். வக்பு வாரிய நிலங்கள் விற்கப்படமாட்டாது என எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்க வேண்டும். '' எனக் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

sankar
ஆக 08, 2024 22:28

ஒரு பத்து சீட்டு கூட ஜெயிச்சுட்டாராம் -காந்திகூட சேர்ந்து ஒரே கும்மாளம் - பல்லபுடுங்கி ஒக்காரவைக்க போறாங்க தம்பி


nagendhiran
ஆக 08, 2024 20:08

கணக்கில் வந்தால் எப்படி விற்க முடியும் அறவேக்காடு?


P. VENKATESH RAJA
ஆக 08, 2024 19:07

தன்னை உயர்ந்ததாக கருதி கொள்ளும் பா.ஜ., அகிலெஷ் சொன்ன மாதிரி பாரதிய ஜமீன் கட்சி என மாற்றி கொள்ளலாம்


sankar
ஆக 08, 2024 22:30

இவர்கள் பைவ் ஸகோயார் கட்சி என்று வைப்பார்கள் போல


Sathyanarayanan Sathyasekaren
ஆக 08, 2024 22:37

வெங்கடேஷ் ராஜா திருச்சி மாவட்டம் திருவெள்ளறை கிராமத்தில் 2000 வருடம் பழமையான கோவில் மற்றும் அதனை சார்ந்த கிராமம், நிலங்கள் வீடுகள் அனைத்தும் வக்ப் வாரிய சொத்து என்று உரிமை கோருகிறார்கள், அங்கு இருக்கும் மக்கள் சொத்து பரிமாற்றங்கள் செய்யமுடியாமல் தவிக்கிறார்கள். என்ன செய்யலாம், சொல்லுங்கள். கான் ஸ்கேம் காங்கிரஸ் கொண்டுவந்த வக்ப் வாரிய சட்டத்தை அப்படியே வைக்கலாமா? இல்லை மாற்ற வேண்டுமா? சொல்லுங்கள். இது ஒரு உதாரணம் தான் இதை போல வட இந்தியாவில் பல ஹிந்துக்களின் சொத்துக்கள் அவர்கள் வசம் ஆகியுள்ளன.


KRISHNAN R
ஆக 08, 2024 19:00

ஓகே இவர்கள் செய்றது சொல்றாங்க


மேலும் செய்திகள்







புதிய வீடியோ