உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., -- எம்.பி., கங்கனாவை அறைந்த காவலர் சஸ்பெண்ட்

பா.ஜ., -- எம்.பி., கங்கனாவை அறைந்த காவலர் சஸ்பெண்ட்

சண்டிகர், பா.ஜ., - எம்.பி.,யாக தேர்வாகியுள்ள பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தை, சண்டிகர் விமான நிலையத்தில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பெண் காவலர் கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அந்த பெண் காவலர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.ஹிமாச்சல பிரதேசத்தின் மண்டி லோக்சபா தொகுதியில் பா.ஜ., சார்பில் களமிறங்கிய கங்கனா ரணாவத், அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்ய சிங்கை, 74,755 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.இதன் வாயிலாக, ஹிமாச்சல் மாநிலத்தில் இருந்து தேர்வான நான்காவது பெண் எம்.பி., என்ற பெருமையை பெற்றார்.இந்நிலையில், டில்லியில் பா.ஜ., சார்பில் எம்.பி.,க்கள் கூட்டத்துக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க, கங்கனா நேற்று மாலை 3:00 மணிக்கு சண்டிகர் விமான நிலையத்திற்கு சென்றார். அங்கு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சி.ஐ.எஸ்.எப்., எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பெண் காவலரான குல்வீந்தர் கவுர், கங்கனாவை தடுத்து நிறுத்தி சோதனையிட்டார்.அப்போது, அவரிடம் பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் குறித்து கங்கனா கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதில், அந்த பெண் காவலர் ஆத்திரமடைந்து கங்கனாவின் கன்னத்தில் அறைந்ததாக தகவல் வெளியானது. இதனால், விமான நிலைய வளாகத்தில் கங்கனா வாக்குவாதத்தில் ஈடுபடுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின.இந்த விவகாரத்திற்கு பின் கங்கனா டில்லி புறப்பட்டு சென்றார். அங்கு விமானத்தில் இருந்து தரையிறங்கியதும், சி.ஐ.எஸ்.எப்., இயக்குனர் நினா சிங்கை சந்தித்து புகார் அளித்தார்; அத்துடன், அப்பெண் பாதுகாவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இப்புகாரின்படி, பெண் காவலர் உடனே சஸ்பெண்ட் செய்யப்பட்டதுடன், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, இச்சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கும் வகையில், பா.ஜ., - எம்.பி., கங்கனா, சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.அதில் அவர், 'பஞ்சாபில் நடந்த விவசாயிகள் போராட்டத்தின் போது, காலிஸ்தான் அமைப்பினருக்கு ஆதரவாக பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்ததற்கு, என் மீது அப்பெண் காவலர் தாக்கினார். இச்சம்பவம் குறித்து, மத்திய உள்துறை அமைச்சகத்திடமும் புகார் தெரிவித்துள்ளேன்' என, குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

ram
ஜூன் 11, 2024 15:36

அந்த crpf பெண் அந்த பதவிக்குக்கு தகுதியானவர் இல்லை மேலும் அந்த பெண்ணை NSA மூலம் விசாரிக்கப்பட வேண்டும். இப்போது அந்த சஸ்பெண்ட் செய்த பெண்ணுக்கு சில தீவிரவாதி இயக்கங்கள் லட்ச கணக்கான பணம் கொடுக்க வருகிறது அதையும் கண்காணிக்க வேண்டும்.


saravanan
ஜூன் 08, 2024 12:27

கட்டுப்படுத்தமுடியாத மனநிலையில் பாதுகாப்பு படையினர் பனி செய்வது ஆபத்தானது. பனி நீக்கம் செய்யவேண்டும்.


Sampath Kumar
ஜூன் 08, 2024 11:58

இனி எல்லா பிஜேபி எம் .பி களுக்கும் ஏச்சரிக்கை இது தான் வாயை வைத்து ரோம்ப உருட்டினால் அடி தான் மக்கள் நன்றாக இவர்களை பற்றி புரிந்து கொண்டார்கள்


MADHAVAN
ஜூன் 08, 2024 10:58

கங்கனா போன்றவர்கள் சண்டைகளை பிஜேபி ல மட்டும்தான் சேர்ப்பங்க


sankar
ஜூன் 08, 2024 10:50

இந்த பாதுகாப்பு நபரை பதவி நீக்கம் செய்து கையில் காப்பு மாட்டி தீர விசாரிக்கவேணும் - காலிஸ்தான் பார்ட்டி என்று நினைக்கிறேன் - பாதுகாவல் பணியில் இருப்போர் பணியில் இருக்கும்போது அரசியல் மற்றும் வேறு விஷயங்களில் தலையிட உரிமை இல்லை - ஆகவே ஜாக்கிரதையாக இந்த விஷயத்தை அணுகவேண்டும் - ஏற்கெனெவே ஒரு சீக்கியர் நமது முன்னாள் பிரதமரை கொன்றார் என்பது நினைவில் கொள்ளுங்கள் - இது தேச பாதுகாப்பு விஷயம்


sankar
ஜூன் 08, 2024 10:50

இந்த பாதுகாப்பு நபரை பதவி நீக்கம் செய்து கையில் காப்பு மாட்டி தீர விசாரிக்கவேணும் - காலிஸ்தான் பார்ட்டி என்று நினைக்கிறேன் - பாதுகாவல் பணியில் இருப்போர் பணியில் இருக்கும்போது அரசியல் மற்றும் வேறு விஷயங்களில் தலையிட உரிமை இல்லை - ஆகவே ஜாக்கிரதையாக இந்த விஷயத்தை அணுகவேண்டும் -இது தேச பாதுகாப்பு விஷயம்


Raa
ஜூன் 07, 2024 11:28

விமான நிலையம் போனியா.. விமானம் ஏறினாயா என்று இல்லாமல், அங்கு என்ன விவசாயம் பண்ண வேண்டிக்கிடக்கு? வாளால் வீழ்த்தவனைவிட வாயால் வீழ்ந்தவன் தான் அதிகம்.


will smith
ஜூன் 07, 2024 07:47

இதுகள் கையில் துப்பாக்கி வேறு.


Training Coordinator
ஜூன் 07, 2024 05:57

உன்னை போல ஆட்டக்கார ஐட்டத்துக்கு ஓட்டு போட்ட மண்டி மடையர்களை அடித்திருக்க வேண்டும்.


Nermaiyanavan
ஜூன் 07, 2024 10:18

அப்போ, தமிழ்நாட்டில் தீயமுகவுக்கு ஓட்டு போட்டவங்களை எதை கொண்டு அடிக்க வேண்டும்.


Senthoora
ஜூன் 07, 2024 04:30

போனால் போன வேலையை பார்க்கணும், தேவை இல்லாததை சொன்னால் இப்படித்தான் சிலரிடம் வாங்கிக்கட்டி மரியாதை இழக்கவேண்டிவரும், அந்த பொண்ணுக்கு பஞ்ஜாப்பில் நல்ல இடத்தில வேலை கிடைக்கும், ஆனால் வாங்கிய அறை இனி ஏர்போட்டுக்குப்போகும்போதெல்லாம் நினைவுவரும், இதுக்குதான் பொது இடத்தில நா அடக்கம் வேண்டும்.


sankar
ஜூன் 08, 2024 10:51

தம்பி அவர் மீட்டிங்கில் பேசியது -


ram
ஜூன் 11, 2024 15:38

எவ்வளுநாள் பஞ்சாப் அரசு வேலை கொடுக்கும். அந்த பெண் ஒரு தீவிரவாதி.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை