உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பூங்கா திறப்பு நேரத்தை மாற்ற பா.ஜ., ரமேஷ் வலியுறுத்தல்

பூங்கா திறப்பு நேரத்தை மாற்ற பா.ஜ., ரமேஷ் வலியுறுத்தல்

பெங்களூரு: 'பெங்களூரு மாநகராட்சி பூங்காக்களில், பொது மக்களின் பார்வை நேரத்தை மாற்ற வேண்டும்' என பா.ஜ., முன்னாள் கவுன்சிலர் ரமேஷ் வலியுறுத்தி உள்ளார்.பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத்துக்கு அவர் எழுதிய கடிதம்:பெங்களூரு மாநகராட்சி பூங்காக்களில், பொதுமக்கள் பார்வையிட, ஓய்வெடுக்க காலை 6:00 முதல் இரவு 10:00 மணி வரை அனுமதி அளித்து, தலைமை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவால் அசம்பாவிதங்கள் நடக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே பூங்காவின் பார்வை நேரத்தை மாற்ற வேண்டும்.மக்களின் லட்சக்கணக்கான ரூபாயை செலவிட்டு, ஒவ்வொரு பூங்காவையும் மேம்படுத்துகிறீர்கள். பூங்காவில் உள்ள மரம், செடி, கொடிகளை நிர்வகிக்க தினமும் நான்கைந்து மணி நேரம் தேவைப்படுகிறது. இதற்கு முன் காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரையும், மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை நேரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இப்போது காலை 6:00 முதல் இரவு 10:00 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அருவருக்கத்தக்க சம்பவங்கள், சட்டவிரோத செயல்கள் நடக்கின்றன.குறிப்பாக இந்த நேரத்தில், இளைஞர்கள், இளம் பெண்கள் ஆபாசமாக நடந்து, மற்றவருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துகின்றனர். இத்தகைய சம்பவங்களை தவிர்க்கவும், பூங்காவில் உள்ள தாவரங்களின் பாதுகாப்பை மனதில் கொண்டும், பூங்காவின் பார்வை நேரத்தை மாற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை