உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பார்வையற்றவர் வேட்புமனு தாக்கல்

பார்வையற்றவர் வேட்புமனு தாக்கல்

பீதர்: பீதர் லோக்சபா தொகுதியில், முதல் நாளான நேற்று, பார்வையற்ற ஒருவர், வேட்புமனுத் தாக்கல் செய்தார்.கர்நாடகாவில் முதல் கட்டமாக வரும் 26ம் தேதி, 14 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடக்கிறது. இரண்டாம் கட்டமாக, 14 தொகுதிகளுக்கு மே 7ம் தேதி தேர்தல் நடக்கிறது.இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று துவங்கியது. வரும் 19ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள்.முதல் நாளான நேற்று பீதர் தொகுதியில், கடவாடா கிராமத்தை சேர்ந்த திலீப் நாகப்பா புசா, சுயேச்சையாக, முதல் ஆளாக வேட்புமனுத்தாக்கல் செய்தார்.மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருாமன கோவிந்த ரெட்டியிடம் சமர்ப்பித்து, 'பிரெய்லி' எழுத்து மூலம் உறுதிமொழி எடுத்துக் கொண்டார். எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இன்றி, ஒரு சிலருடன் வந்து வேட்புமனுத் தாக்கல் செய்தார்.பா.ஜ., வேட்பாளர் பகவந்த் கூபா 17ம் தேதியும்; காங்கிரஸ் வேட்பாளர் சாகர் கன்ட்ரே 18ம் தேதியும் வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை