உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹெராயின், துப்பாக்கி கடத்திய பாகிஸ்தான் ட்ரோன்: சுட்டு வீழ்த்தியது பாதுகாப்பு படை

ஹெராயின், துப்பாக்கி கடத்திய பாகிஸ்தான் ட்ரோன்: சுட்டு வீழ்த்தியது பாதுகாப்பு படை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: பஞ்சாபின் பெரோஸ்பூரில், ஹெராயின், கைத்துப்பாக்கிகளை ஏற்றிச் சென்ற பாகிஸ்தான் ட்ரோனை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.பஞ்சாபின் பெரோஸ்பூரில், பாகிஸ்தானுக்கு சொந்தமான, ட்ரோன் ஒன்று வானில் பறந்து கொண்டிருந்தது. இதனை கவனித்த பாதுகாப்பு படையினர் ட்ரோனை சுட்டு வீழ்த்தினர். அதில் இருந்து 500 கிராம் ஹெராயின் மற்றும் கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், சுட்டுவீழ்த்தப்பட்ட ட்ரோன், ஹெராயின் மற்றும் கைத்துப்பாக்கி படத்தை பி.எஸ்.எப்., சமூகவலைதளத்தில் பகிர்ந்து, 'சீனாவில் தயாரிக்கப்பட்ட DJI Mavic 3 கிளாசிக் ரக ட்ரோனை பி.எஸ்.எப்., வீரர்கள் தொழில்நுட்ப வழிமுறைகளைப் பயன்படுத்தி சுட்டு வீழ்த்தினர் ' என குறிப்பிட்டுள்ளது.கடந்த சில மாதங்களாக, பஞ்சாபில் பல பாகிஸ்தான் ட்ரோன்களை பி.எஸ்.எப்., படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். மார்ச் மாதம் அமிர்தசரஸ் அருகே பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட இரண்டு ட்ரோன்களை பஞ்சாப் போலீசார் பறிமுதல் செய்தனர். பிப்ரவரி மாதம், குர்தாஸ்பூர் மாவட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே சீனாவில் தயாரிக்கப்பட்ட மற்றொரு ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Barakat Ali
அக் 12, 2024 21:25

சீனாக்காரன் டுரோன்களை ஃப்ரீயா கொடுத்துட்டு பாக் பேகம் களை இஸ்த்துக்குனு போறானுங்க போல ....


Rasheel
அக் 12, 2024 12:40

தேச விரோதிகள் போதை பொருள்கள் மூலம் தீவிரவாதத்தை பரப்புகின்றனர்.


Pandi Muni
அக் 12, 2024 12:24

பின் தொடர்ந்து செல்ல நம்மகிட்ட பறக்கிறமாதிரி வண்டி எதுவும் இல்லாமதான் சுட்டானுங்க .


N Sasikumar Yadhav
அக் 12, 2024 13:16

உங்கள மாதிரியான தேசதுரோகிகளிடம் என்ன எதிர்பார்க்க முடியும் .


Barakat Ali
அக் 12, 2024 21:23

பாண்டிமுனியின் அறிவு அம்புட்டுதேன் .....


Anand
அக் 12, 2024 11:56

இஸ்ரேலை தொடர்ந்து இந்தியாவும் புகுந்து அழிக்கும் காலம் விரைவில் வரும்.


Sridhar
அக் 12, 2024 11:52

அதை ஏன் சுட்டு வீழ்த்தவேண்டும்? அது போகும்போக்கில் சென்று யாருக்கு அனுப்பப்படுகிறது, அவர்களுடைய நெட்ஒர்க் என்ன என்பதுபோன்ற விவரங்களை சேகரிக்கலாமே? இந்த சின்ன விஷயம்கூட தெரியாமல் இருக்காது. ஆனால் வெளிவந்த செய்தி நம்ம பாதுகாப்புப்படை எதோ விவரங்கெட்ட கும்பல்ங்கற மாதிரி தோற்றத்தை கொடுக்குது.


சாண்டில்யன்
அக் 12, 2024 12:46

பாதுகாப்புப்படை மட்டுமா?


Barakat Ali
அக் 12, 2024 21:27

சுட்டு வீழ்த்தியதால் எதுவுமே தெரியாமலா போய்விட்டது ???? யாராவது குறைகூற மாட்டார்களா அதை வழிமொழிய மாட்டோமா என்று காத்திருந்த அறிவாலய அன்பர் கொடுத்த பதிலைப்பாருங்கள் ....


Kumar Kumzi
அக் 12, 2024 11:31

உழைத்து சாப்பிட தெரியாத மூர்க்க காட்டேரிகள் கள்ளக்கடத்தல் தொழில்களில் ஈடுபடுவான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை