ஒரு மாதத்திற்குள் சி.ஏ.ஜி., ரிப்பேர்ட்: சட்டசபை செயலருக்கு உத்தரவு
விக்ரம்நகர்:“மதுபான கொள்கை குறித்த சி.ஏ.ஜி., எனும் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கை மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை அளிக்கும்படி, சட்டசபை செயலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,” என, சபாநாயகர் விஜேந்தர் குப்தா தெரிவித்தார்.சட்டசபையில் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான சி.ஏ.ஜி., புதன்கிழமை அன்று தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து நேற்று சட்டசபையில் நடந்த விவாதத்தின்போது சபாநாயகர் விஜேந்தர் குப்தா கூறியதாவது:சி.ஏ.ஜி., அறிக்கை மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை அளிக்கும்படி சட்டசபை செயலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சி.ஏ.ஜி., அறிக்கை, பொதுக்கணக்குக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்படும். இதற்காக குழு விரைவில் அமைக்கப்படும்.இந்த குழு, அறிக்கை தொடர்பான அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.சி.ஏ.ஜி., அறிக்கை குறித்து பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் பலரும் கருத்துகளை பதிவு செய்தனர்.