உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 110 கிராமங்களுக்கு விரைவில் காவிரி குடிநீர் வினியோகம்

110 கிராமங்களுக்கு விரைவில் காவிரி குடிநீர் வினியோகம்

பெங்களூரு : ''காவிரி இறுதி கட்ட பணிகள் நடந்து வருவதால், விரைவில் பெங்களூருடன் இணைக்கப்பட்ட 110 கிராமங்களுக்கும் காவிரி நீர் வினியோகிக்கப்படும்,'' என குடிநீர் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் தெரிவித்தார்.பெங்களூரு மாநகராட்சியாக இருந்த போது, 110 கிராமங்கள், கடந்த 2007ல் பெங்களூருடன் இணைக்கப்பட்டது. இதன் மூலம் கிரேட்டர் பெங்களூரு மாநகராட்சியாக மாறியது. அதன்பின், இக்கிராமங்களுக்கு காவிரி ஐந்தாவது குடிநீர் திட்டம் பணிகள் நடந்து வந்தது.இது தொடர்பாக பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் கூறியதாவது:காவிரி ஐந்தாவது குடிநீர் திட்ட பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது. ஓரிரு வாரங்களில் இப்பணிகள் முடிவடைந்து, குடிநீர் வினியோகம் துவங்கும். அதற்கு முன், போதிய தண்ணீர் வினியோகம், புதிய இணைப்புகள் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.இப்பணிகள் முடிந்த பின், பெங்களூருக்கு கூடுதலாக தினமும் 750 லிட்டர் தண்ணீர் வினியோகிக்கப்படும். இது குறித்து, 110 கிராமங்களில் உள்ள மக்களுக்கு குடிநீர் இணைப்பு பெற நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.இந்த 110 கிராமங்களில் சிலர் அனுமதி பெறாமல் இணைத்துள்ளதாக புகார்கள் வந்துள்ளன. இவற்றை அதிகாரிகள் சரிபார்க்க உத்தரவிட்டுள்ளேன். குடிநீர் இணைப்பை பெற்றவர்கள் மூலம், குடிநீர் வடிகால் வாரியத்துக்கு வருவாய் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
மே 16, 2024 12:39

பெங்களூருக்கு கூடுதலாக தினமும் லிட்டர் தண்ணீர் வினியோகிக்கப்படும் ஒரு குடும்பத்திற்கு லிட்டர் தண்ணீர் தினமும் விநியோகிப்பீர்களா? அல்லது ஒட்டுமொத்த பெங்களூருக்கா,,,? புரியவில்லையே


Ramesh Sargam
மே 16, 2024 12:36

புதிய இணைப்பு பகுதிகளுக்கு தண்ணீர் கொடுப்பது சந்தோஷம் ஆனால், பழைய இணைப்பு பகுதிகளுக்கு சரியாக தண்ணீர் கொடுப்பதில்லையே? தண்ணீர் பற்றாக்குறையினால், பழைய பகுதி மக்கள் டேங்கர் மூலம் அதிக விலைகொடுத்து தங்களது அன்றாட உபயோகத்துக்கு தண்ணீர் வாங்கும் அவலத்தை என்று போக்குவீர்கள்?


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி