உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கெஜ்ரிவாலுக்கு ஜாமின் மறுப்பு சி.பி.ஐ., பதிலளிக்க உத்தரவு

கெஜ்ரிவாலுக்கு ஜாமின் மறுப்பு சி.பி.ஐ., பதிலளிக்க உத்தரவு

புதுடில்லி, மதுபான ஊழல் தொடர்பான சி.பி.ஐ., வழக்கில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது; இது தொடர்பாக பதிலளிக்கும்படி சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டுள்ளது.டில்லி அரசின் மதுபானக் கொள்கையை மாற்றியமைத்ததில் மோசடி நடந்ததாக புகார்கள் எழுந்தன. இவை தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக அமலாக்கத் துறையும் விசாரிக்கிறது.இந்த வழக்கில், ஆம் ஆத்மி தலைவரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். அமலாக்கத் துறை வழக்கில் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கில் இடைக்கால ஜாமின் கேட்டு அவர் தாக்கல் செய்த மனுவை, டில்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது.இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை, நீதிபதிகள் சூர்ய காந்த், உஜ்ஜல் புய்யான் அமர்வு நேற்று விசாரித்தது. இடைக்கால ஜாமின் வழங்க மறுத்த அமர்வு, சி.பி.ஐ., பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. வழக்கின் விசாரணை, 23ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இதே வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, எம்.பி.,யான சஞ்சய் சிங் ஆகியோர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கெஜ்ரிவாலுக்கும் ஜாமின் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி