உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போஸ்ட் ஆபீசில் சி.பி.ஐ., ரெய்டு அதிகாரி தற்கொலை

போஸ்ட் ஆபீசில் சி.பி.ஐ., ரெய்டு அதிகாரி தற்கொலை

அலிகார், உத்தர பிரதேசத்தில் உள்ள போஸ்ட் ஆபீசில் சி.பி.ஐ., சோதனை நடத்திய நிலையில், அங்கு பணியாற்றிய அதிகாரி நேற்று தற்கொலை செய்து கொண்டார். உத்தர பிரதேசத்தின் புலந்த்ஷாஹரில் உள்ள தலைமை போஸ்ட் ஆபீசில் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.இதையடுத்து, அங்கு நேற்று முன்தினம் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். பல்வேறு ஆவணங்களை கைப்பற்றிய அவர்கள், அங்கு பணியாற்றிய கண்காணிப்பாளர் திரிபுவன் பிரதாப் சிங் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில், அலிகாரில் உள்ள தன் வீட்டில் திரிபுவன் பிரதாப் சிங் நேற்று காலை துப்பாக்கியால் கூட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான குறிப்பை தன் அலுவலக வாட்ஸாப் குழுவில் பகிர்ந்துள்ளார். அதில், 'போஸ்ட் ஆபீசில் உள்ள சக ஊழியர்கள் தங்கள் உத்தரவுப்படி வேலை செய்ய கட்டாயப்படுத்தினர்' என, அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பு தொடர்பாக ஊழியர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், திரிபுவன் பிரதாப் சிங்கின் சகோதரர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அவர் இறந்து கிடந்தார். இந்த விவகாரத்தில் ஒரு பெண் உள்ளிட்ட சில அதிகாரிகள் பிரதாபை துன்புறுத்தியதாக அவரின் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை