உள்ளூர் செய்திகள்

சினி கடலை

குடும்பத்துடன் பார்க்கலாம்நடிகர் ரவிச்சந்திரன், வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்தவர். லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவரது நடிப்பில், தி ஜட்ஜ்மென்ட் திரைப்படம் நேற்று முன் தினம், திரைக்கு வந்தது. தந்தை, மகனுக்கு இடையிலான பாசப்பிணைப்பு, நீதிமன்ற சூழ்நிலைகள் படத்தில் இடம் பெற்றுள்ளன. இதில் ரவிச்சந்திரன், வழக்கறிஞராக நடித்துள்ளார். கொலை, அரசியல், லீகல் திரில்லிங் கதை கொண்டது. எந்த தர்மசங்கடமும் இல்லாமல், குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கலாம் என, படக்குழுவினர் உறுதி அளித்துள்ளனர். திகந்த், தன்யா ராம்குமார், லட்சுமி கோபாலசாமி, மேகனா காங்க்வர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.மூட நம்பிக்கைக்கு எதிர்ப்புகன்னடத்தில் அவ்வப்போது, சமூக அக்கறை கொண்ட திரைப்படங்கள் வெளியாகின்றன. இந்த வரிசையில் கவுமுதி படமும் சேர்ந்துள்ளது. சமீபத்தில் படப்பிடிப்பு துவங்கியது. சர்வதேச விருது பெற்ற, கந்தீலு படத்தை இயக்கிய யசோதா பிரகாஷ், இப்படத்தையும் இயக்கியுள்ளார். இது, இவர் இயக்கும் மூன்றாவது படமாகும். கல்வி, அறிவியல், நம்பிக்கை, மூட நம்பிக்கை இடையிலான வித்தியாசம் பல அம்சங்களை, அடிப்படையாக கொண்டு திரைக்கதை பின்னப்பட்டுள்ளது. பண்டைய காலம் முதல், இதுவரை கிராமங்களில் கடைபிடிக்கப்படும் மூடநம்பிக்கைகளை படத்தில் விவரித்துள்ளனர். மூட நம்பிக்கையை எதிர்த்து போராடும் கதாபாத்திரத்தில், நடிகை அக்ஷதா பாண்டவபுரா நடித்துள்ளார்.இரண்டு பாக டிரெய்லர் இரண்டு பாகமாக திரைப்படங்கள் வெளியிடுவது வழக்கம். ஆனால் இயக்குனர் அருண் இயக்கும், வித்யார்த்தி வித்யார்த்தினியரே படத்தின் டிரெய்லரை, இரண்டு பாகமாக வெளியிடுகிறார். முதற்கட்ட டிரெய்லர் வெளியாகியுள்ளது. அடுத்த இரண்டு வாரங்களில், இரண்டாம் கட்ட டிரெய்லர் வெளியாகவுள்ளது. திரைப்படம், ஒரே பாகமாக வெளியாகும். படத்தில் நடிகர் சந்தன்ஷெட்டி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பெற்றோரின் கட்டுப்பாட்டில் இருந்து விலகி செல்லும் பிள்ளைகளை, சரியான பாதைக்கு கொண்டு வருவதை, படத்தில் காண்பித்துள்ளனர்.பிரிக்க முடியாத பந்தம்சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இடையே, பிரிக்க முடியாத சம்பந்தம் உள்ளது. பல கலைஞர்கள் சின்னத்திரையில் ஜொலித்து, வெள்ளித்திரைக்கு வருகின்றனர். சிலர் வெள்ளித்திரையில் நடிப்பு பயணத்தை துவங்கி, சின்னத்திரைக்கு தாவுகின்றனர். சில படங்களில் நாயகியாக நடித்த திவ்யா உருடுகா, 'பிக்பாஸ் ரியாலிட்டி' ஷோவுக்கும் சென்றுள்ளார்.. தற்போது சின்னத்திரைக்குள் நுழைந்துள்ளார். கன்னடத்தில் 'நினகாகி' என்ற தொடரில் நடிக்கிறார். இதில் ரச்சு என்ற அழகான இளம் பெண்ணின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.எதிர்பாராத கிளைமாக்ஸ்சிறு வயதில் நடந்த சம்பவத்தால், மன நலம் பாதிக்கப்பட்ட நாயகி, இவருக்கு தெரியாமலேயே நோயில் இருந்து காப்பாற்ற முயற்சிக்கும் நாயகன். இதற்காக ஒரு உபாயம் செய்கிறார். நாயகனுக்கு நண்பர்கள் உதவுகின்றனர். நோய் தாக்கத்தில் இருந்து, நாயகி முற்றிலுமாக விடுபட்டாரா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ள, நால்கனே ஆயாமா திரைப்படத்தை, பார்க்க வேண்டும். மிரட்டலான ஹாரர் கதை கொண்டதாகும். படத்தின் கிளைமாக்சை யாரும் எதிர்பார்க்காத வகையில் இருக்குமாம். ஐந்தாறு கதாபாத்திரங்களை சுற்றிலும், கதை நகர்கிறது.நாயகியருக்கு முக்கியத்துவம்சுபா பூஞ்சா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும், 3 தேவி திரைக்கு வந்துள்ளது. இதில் ஜோத்ஸ்னா, சந்தியாவும் நடிக்கின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, படம் திரைக்கு வந்திருக்க வேண்டும். கொரோனா தொற்று பரவியதால், படப்பிடிப்பு தாமதமானது. மூன்று இளம்பெண்கள் காட்டுக்கு செல்கின்றனர். இங்கு பெண் புலியின் ஆத்மா, இவர்களுக்கு வழி காண்பிக்கிறது. மூன்று நாயகியருக்கும் இயக்குனர் சமமான முக்கியத்துவம் அளித்துள்ளார். நடிப்புடன் சுபா பூஞ்சா, இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர். மூன்று நாயகியரும் ஆக்ஷன் காட்சிகளில் வெளுத்து கட்டியுள்ளனராம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி