மேலும் செய்திகள்
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
1 hour(s) ago
பெண் தற்கொலை
1 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
1 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
1 hour(s) ago
இடுக்கி,முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு மிகவும் கவலை அளிப்பதாகவும், மத்திய அரசு தலையிட்டு புதிய அணை கட்ட நடவடிக்கை எடுக்கும்படியும் இடுக்கி மறைமாவட்ட சைரோ மலபார் கத்தோலிக்க திருச்சபை கோரிக்கை விடுத்துள்ளது.கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில், 1895ல் கட்டப்பட்ட முல்லை பெரியாறு அணையை தமிழக அரசு பராமரித்து வருகிறது. 130 ஆண்டுகள் பழமையான அணையின் உறுதி தன்மை குறித்து கேரள அரசு கேள்வி எழுப்பி வருகிறது.அணை பாதுகாப்பாக உள்ளதாக தமிழக அரசு தெரிவிக்கிறது. அணையை ஆய்வு செய்த நிபுணர் குழுவும் அணை உறுதியாக இருப்பதாக தெரிவித்தது. கேரளாவின் வயநாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட நிலச்சரிவை தொடர்ந்து, முல்லை பெரியாறு அணை விவகாரம் மீண்டும் பேசு பொருளாகி உள்ளது.அணையின் பாதுகாப்பு குறித்து பல்வேறு தரப்பினரும் கவலையை வெளிப்படுத்த துவங்கியுள்ளனர். 'அணை உடைந்தால் பொறுப்பேற்பது யார்?' என, நடிகரும், மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி சமீபத்தில் கேள்வி எழுப்பினார்.இந்நிலையில், இடுக்கி மறைமாவட்ட ரைரோ மலபார் கத்தோலிக்க திருச்சபை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:முல்லை பெரியாறு அணை உடைந்துவிடுமோ என்ற அச்சத்தில் கேரள மக்கள் உள்ளனர். பொதுவாக 50 - 60 ஆண்டுகள் ஆயுட்காலம் உள்ள அணை, 130 ஆண்டுகள் ஆகியும் பாதுகாப்பாக உள்ளதாக கேரள மக்கள் நம்பவைக்கப்பட்டுள்ளனர். இந்த அணையின் அருகிலேயே புதிய அணை கட்ட வேண்டியது இன்றைய அவசியமாக உள்ளது. தற்போதுள்ள அணை பழசாகிவிட்டதால், புதிய அணை கட்ட வேண்டியது அவசியம் என, 2011 ஐ.நா., அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால், மக்கள் அச்சப்பட தேவையில்லை என அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கூறுவதன் நோக்கம் புரியவில்லை.இது இரு மாநிலங்களுக்கு இடையிலான விவகாரம் என்பதால், மத்திய அரசு தலையிட்டு புதிய அணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்துக்கு தண்ணீர் தர வேண்டியதன் அவசியத்தையும் நாங்கள் உணர்ந்துள்ளோம். இதில் கேரள அரசின் அலட்சியத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago