உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நோயாளியை தாக்கிய கே.சி., ஜெனரல்  வார்டு பாய் மீது புகார்

நோயாளியை தாக்கிய கே.சி., ஜெனரல்  வார்டு பாய் மீது புகார்

மல்லேஸ்வரம்: பெங்களூரு மல்லேஸ்வரம் கே.சி., ஜெனரல் அரசு மருத்துவமனையில் நோயாளியை தாக்கியதாக, வார்டு பாய் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.பெங்களூரு ரூரல் நெலமங்களாவை சேர்ந்தவர் வெங்கடேஷ், 35. கடந்த 22ம் தேதி குடும்ப தகராறில், விஷம் குடித்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு ஆனேக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைக்காக பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள, கே.சி., ஜெனரல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.நேற்று காலை வெங்கடேஷை, குடும்பத்தினர் சந்தித்தனர். அப்போது அவரது முகம் வீங்கி இருந்தது. இதுபற்றி கேட்டபோது, சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுத்ததால், வார்டு பாய் தனஞ்ஜெய் கண்மூடித்தனமாக தாக்கியதாக கூறினார்.இதையடுத்து தனஞ்ஜெய் மீது மல்லேஸ்வரம் போலீசில், வெங்கடேஷ் குடும்பத்தினர் புகார் செய்தனர். அரசு மருத்துவமனையில், நோயாளிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து மருத்துவமனையின் கண்காணிப்பாளர் இந்திரா கபடே கூறுகையில், ''வெங்கடேஷுக்கு எங்கள் மருத்துவர்கள், நல்ல முறையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். சில நேரங்களில் அவர், வித்தியாசமாக நடந்து கொள்கிறார். அவரை கட்டுப்படுத்துவது கடினமாக உள்ளது. ''வெங்கடேஷை, வார்டு பாய் தனஞ்ஜெய் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை என்னால் நம்ப முடியவில்லை. தனஞ்ஜெயிடம் கேட்டபோது, நான் தாக்கவில்லை என்று கூறினார். ''கண்காணிப்பு கேமராவும் சரியாக வேலை செய்யவில்லை. தனஞ்ஜெய் மீது தவறு இருந்தால், அவர் மீது நடவடிக்கை எடுப்போம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி