உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தெற்கு பா.ஜ., - எம்.பி., மீது தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்

தெற்கு பா.ஜ., - எம்.பி., மீது தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்

புதுடில்லி:லோக்சபா தேர்தலின்போது நடத்தை விதிகளை தெற்கு டில்லி பா.ஜ., - எம்.பி., ராம்வீர் சிங் பிதுரி மீறியதாக ஆம் ஆத்மி கட்சியின் சவுரப் பரத்வாஜ் குற்றம்சாட்டியுள்ளார்.செய்தியாளர்களிடம் நேற்று முன்தினம் மாநில அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கூறியதாவது:தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த காலகட்டத்தில், ஏப்ரல் 24ம் தேதி, தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலரை ஒரு துாதுக்குழுவினருடன் எம்.பி., ராம்வீர் சிங் பிதுரி சந்தித்துப் பேசியுள்ளார். இது மக்கள் பிரதிநிதித்துவச்சட்டத்தின் படி, வாக்காளர்களுக்கு தவறான செய்தியை கொண்டு செல்லும். இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய சந்திப்பு. இது தேர்தலைக்கூட ரத்து செய்ய வழிவகுக்கும் குற்றமாகும்.இந்த சந்திப்பு குறித்த தகவல், பா.ஜ.,வின் முன்னாள் எம்.எல்.ஏ., ஒருவரின் முகநுால் பக்கத்தில் இருந்து எனக்கு கிடைத்தது. இந்த சந்திப்பு தொடர்பாக தலைமைச் செயலர் மீது மத்திய உள்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த குற்றச்சாட்டுக்கு பிதுரியிடமிருந்து உடனடி பதில் எதுவும் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை