உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாலைப்பணிகளை சீக்கிரம் முடிங்க - உங்கள் காலில் கூட விழுகிறேன்: ஐ.ஏ.எஸ்., சிடம் கெஞ்சிய நிதீஷ்

சாலைப்பணிகளை சீக்கிரம் முடிங்க - உங்கள் காலில் கூட விழுகிறேன்: ஐ.ஏ.எஸ்., சிடம் கெஞ்சிய நிதீஷ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: சாலை மேம்பாட்டு பணிகளை விரைந்து முடியுங்கள் நீங்கள் விரும்பினால் உங்கள் காலில் கூட விழுகிறேன் என பீஹார் முதல்வர் நிதீஷ்குமார் பொது நிகழ்ச்சியில் பலபேர் முன்பு அதிகாரியிடம் கண்டிப்பு காட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது.பீஹாரில் ஜே.பி. கங்கா எக்ஸ்பிரஸ் சாலை திட்டத்தின் கீழ் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதி பணிகள் நிறைவேறின. பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் விழா இன்று (10.07.2024) நடந்தது. இதில் துணை முதல்வர்கள் சம்ராட் சவுத்ரி, விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.விழாவில் பங்கேற்க வந்த முதல்வர் நிதீஷ்குமார், மேடையில் அமர்ந்தார். அப்போது சாலை மேம்பாட்டு பணிகள் தொடர்பான துறை ஐ.ஏ.எஸ். அதிகாரியை பார்த்து திடீரென எழுந்து பணிகளை விரைந்து முடியுங்கள் விரும்பினால் உங்கள் காலில் கூட விழுகிறேன் என கூறி காலில் விழ முயற்சித்தார். உடன் அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியோ அதிர்ந்து போனார். இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.இது குறித்து எதிர்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறியது, .தனக்கு எந்த அதிகாரம் இல்லை என்பதை பொது இடத்தில் முதல்வரே நிரூபித்துவிட்டார் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

venugopal s
ஜூலை 11, 2024 12:06

பாஜகவுடன் கூட்டணி சேர்ந்த பிறகு நன்றாகவே நடிக்கக் கற்றுக் கொண்டு விட்டார்!


Anantharaman Srinivasan
ஜூலை 10, 2024 23:10

ஒவ்வொரு தேர்தலுக்கும் எங்கவூர் ராம்தாஸ் மாதிரி கட்சி மாறிக்கொண்டிருந்தால் யார் மதிப்பார்கள்.


SWAMINATHAN
ஜூலை 10, 2024 21:12

இவர் நல்லவர்


GMM
ஜூலை 10, 2024 21:10

முதல்வர் போன்ற மக்கள் பிரதிநிதிகள் பரிந்துரை செய்ய மட்டும் தான் முடியும். நிர்வாக ரீதியான நடவடிக்கை IAS, IRS, .. பொறியியல் நடவடிக்கை என்ஜினீயர் தான் எடுக்க முடியும். இவர்கள் பணி நடவடிக்கைகளை தொடர்ந்து பதிவு செய்து, நீண்ட காலம் பராமரித்து வருவர். இது போன்ற விதிகள் வகுத்து முறை படுத்தபட்ட பணிகள் அரசியல் வாதிகளுக்கு கிடையாது. எதிர் கட்சி தலைவர் ராகுல் நினைத்த இடம் செல்ல முடிகிறது. அது போல போலீசார், வழக்கறிஞர்கள் நிர்வாக அலுவலர்கள் மூலம் தான் குடிமக்களை தொடர்பு கொள்ள வேண்டும்.


குமார் யாதவ்
ஜூலை 10, 2024 21:09

இத்தனை வருஷமா முதல்வர் பதவில இருந்துக்.கிட்டு என்னத்த கிழிச்சாரு. இவர் அரசியலை விட்டு விலகினாலே பிஹார் உருப்படும்.


ஆரூர் ரங்
ஜூலை 10, 2024 21:41

அதாவது கைதி லாலுவின் நேர்மையான ஆட்சி வேண்டும்னு நினைக்கிறீர்கள்.


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ