உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பார்லிமென்டில் சிலைகள் மாற்றம் அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

பார்லிமென்டில் சிலைகள் மாற்றம் அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, 293 தொகுதிகளை வென்று, மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க உள்ளது. இதையடுத்து, பார்லிமென்ட் வளாகங்களை துாய்மைப்படுத்தும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பழைய பார்லிமென்ட் கட்டடத்தின் முன் வைக்கப்பட்டிருந்த மஹாத்மா காந்தி, அம்பேத்கர், சத்ரபதி சிவாஜி ஆகியோரின் சிலைகள் அகற்றப்பட்டு, வேறு இடத்துக்கு மாற்றப்பட்டன.இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அக்கட்சியின் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், 'பார்லிமென்ட் வளாகத்தின் முகப்புப் பகுதியில் அமைந்திருந்த மஹாத்மா காந்தி, அம்பேத்கர், சத்ரபதி சிவாஜி ஆகியோரின் சிலைகள் அகற்றப்பட்டுள்ளன. இது, அவர்களை அவமானப்படுத்தும் செயல்' என, கூறியுள்ளார்.இதுகுறித்து பார்லிமென்ட் செயலக அதிகாரிகள் தரப்பில் கூறியுள்ளதாவது:புதிய அரசு பதவி ஏற்றவுடன், விரைவில் இரு சபைகளும் கூட உள்ளன. எனவே, பார்லிமென்ட் வளாகத்தில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றின் ஒரு பகுதியாக மஹாத்மா காந்தி, அம்பேத்கர், சத்ரபதி சிவாஜி ஆகியோரின் சிலைகள் பார்லிமென்ட் வளாகத்தில் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. அவை அகற்றப்படவில்லை.திட்டமிட்டபடி பழைய பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள சம்வி தான் சதன் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள தோட்டத்தில் தலைவர்களின் சிலைகள் வைக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ஆரூர் ரங்
ஜூன் 07, 2024 11:55

தனியாக சிலை சமாதிகள் வளாகத்தை ஏற்படுத்த வேண்டும். நகரின் நடுவிலுள்ள சமாதிகளை அகற்றி வெளியே அமைக்க வேண்டும். இனிமேல் மாநகர எல்லைகளுக்குள் எந்தத் தலைவரின் சிலையும் வைக்கத் தடை விதிக்க வேண்டும். ஆலய நிலத்திலுள்ள ஸ்ரீ பெரும்புதூர் ராஜிவ் நினைவிடத்தை அகற்றி காங்கிரசின் பட்டா நிலத்துக்கு மாற்ற வேண்டும்.


Lion Drsekar
ஜூன் 07, 2024 11:30

திருக்கோவில்களில் வழிபட்டுவந்த சிலைகளை மியூசியத்தில் வைத்து அழகுப்பர்க்கிறார்கள் , உலோகத்திலேயே ஒரே ஒரு மனிதர் திரு பொன்மணிக்கவேல் மட்டுமே குரல் கொடுத்து ஓய்ந்துவிட்டார் . நமக்கேன் பெரிய இடத்து பொல்லாப்பு . வந்தே மாதரம்


V RAMASWAMY
ஜூன் 07, 2024 11:21

இனி காங்கிகளுக்கும் அவர்களின் ஜாலராக்களுக்கும் இது தான் வேலை. பா ஐ க் பெருமூச்சு விட்டாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.


Kasimani Baskaran
ஜூன் 07, 2024 09:38

ராமசாமிக்கு சிலை வைக்கவேண்டும் என்று உருட்டாதவரை தர்மம் இவர்களிடமிருந்து தப்பியது.


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 07, 2024 04:52

இந்த பாகிஸ்தானிய ஆதரவாளனுக்கு வாய் அதிகமாகிவிட்டது.


மேலும் செய்திகள்





புதிய வீடியோ