உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரஸ் கட்சிக்கு தொலைநோக்கு பார்வை இல்லை: நிர்மலா சீதாராமன்

காங்கிரஸ் கட்சிக்கு தொலைநோக்கு பார்வை இல்லை: நிர்மலா சீதாராமன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைக்கு தீர்வு காண காங்கிரஸ் கட்சிக்கு தொலைநோக்கு பார்வை இல்லை' என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது குறித்து, ஆங்கில செய்தி சேனலுக்கு நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டி: மத்திய அரசு குறை கூறுவது மட்டும் அல்லாமல், இந்திய மக்களின் சாதனைகளை குறைத்து மதிப்பிடும் வேலையில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியினர் விரக்தியில் உள்ளனர். தற்போது மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைக்க உள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணி அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைக்கு தீர்வு காண காங்கிரஸ் கட்சிக்கு தொலைநோக்கு பார்வை இல்லை. பா.ஜ., அரசை காங்கிரஸ் எம்.பி ராகுல் குறை கூறி வருகிறார். அவர் புள்ளிவிவரங்களுடன் விமர்சிக்கவில்லை. நாங்கள் சிறப்பாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டோம். எதிர்க்கட்சியினரால் திறம்பட போராட முடிந்தால், எங்களை எதிர்த்துப் போராடுங்கள். எங்களது வெற்றியை கண்டு, எப்படி குறை கூறுவது என எதிர்க்கட்சியினர் தயாராகி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

kulandai kannan
மே 28, 2024 23:04

காங்கிரஸ் ஆட்சி இருந்திருந்தால் gpay முறை கூட வந்திருக்காது.


ராம்தேவ்
மே 28, 2024 20:45

அதுக்குன்னு நூறு வருஷத்துக்கு பட்ஜெட் போடுறேன்னு யாரும் கெளம்ப மாட்டாங்க.


Kasimani Baskaran
மே 28, 2024 15:41

காங்கிரசுக்கு பார்வையே கிடையாது. அப்படி இருந்திருந்தால் இந்திய வரி செலுத்துவோரின் இரத்தத்தை குடித்து பதினோரு சதவிகித ஜிடிபி யை இந்தியாவின் அங்கமான காஷ்மீருக்கு தனி அந்தஸ்து என்று சொல்லி செலவு செய்து இருக்க மாட்டார்கள். அந்தப்பணத்தை சாப்பிட்டு பலர் கொழுத்த பணக்காரர்களாக இருக்கிறார்கள். காஷ்மீருக்கு ஒன்றும் செய்யவில்லை.


அரசு
மே 28, 2024 15:29

பத்து வருஷமா உங்களுக்கு தொலை நோக்கு பார்வையே இல்லையா?


Azar Mufeen
மே 28, 2024 14:18

தரமான கல்வி கொடுத்த கெஜ்ரிவால் அரசை கவிழ்க்க துடிக்கும் உங்கள் தொலைநோக்கு பார்வை மக்களுக்கு புரிந்துவிட்டது


Kasimani Baskaran
மே 28, 2024 15:43

அப்படியென்றால் முந்தய காங்கிரஸ் ஆட்சியில் கல்வி தரமில்லயா?


ES
மே 28, 2024 12:48

No one going to believe your lies anymore


Sampath Kumar
மே 28, 2024 11:51

ஆமாமா உண்மை தான் உங்களை போல அவர்கள் ஊக்கை போடல உங்களுக்கு தானே தெய்ரயும் ஊறுகாய் எதனை நாள் ஊற்றவேண்டும் என்ற தோலை நோக்கு பார்வை என்னத்த செய்ய அம்புட்டும் தொல்லை நோக்கிய வந்து சேர்ந்து விட்டது


vetri
மே 28, 2024 11:34

காஸ் மற்றும் பெட்ரோல் விலை மற்றும் ஒவ்வொரு பொருளுக்கும் உள்ள விலை உயர்வு மற்றும் நீங்கள் விதிக்கும் வரியை பார்த்தால் தெரியுது உங்களது தொலைநோக்கு பார்வை...


ஆரூர் ரங்
மே 28, 2024 12:22

UPA பத்தாண்டு ஆட்சியில்தான் பெட்ரோல் விலை(36லிருந்து77)நூறு சதவீதம் ஏறியது. இலவச தடுப்பூசிகளுக்கான செலவு, கோவிட் ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட வருமான இழப்பு போன்றவற்றை கணக்கிட்டால் இப்போதுள்ள லிட்டர் நூறு ரூபாய் மிகக் குறைவே.


ஆரூர் ரங்
மே 28, 2024 11:29

வாக்களிக்க வட மாநிலங்களுக்கு சென்ற ஊழியர்கள் திரும்ப வரவில்லை. வேறு ஆட்களும் கிடைக்கவில்லை என்று இங்கு ஆலை நடத்துபவர்கள் வருந்துகிறார்கள். வேலைவாய்ப்பின்மை பெரிய பிரச்சினை என்கிறார் ராகுல்.


A1Suresh
மே 28, 2024 11:23

எங்கே மக்களுக்கு கல்வியறிவு வந்துவிட்டால் தம்மை தேர்ந்தெடுக்க மாட்டார்களோ என்று நாட்டு மக்களை இத்தனை காலம் வைத்திருப்பது ஊழல் செய்யத்தான்


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி