உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சட்டசபை காவலர்களை கடித்து குதறிய காங்.எம்.எல்.ஏ., சஸ்பெண்ட்

சட்டசபை காவலர்களை கடித்து குதறிய காங்.எம்.எல்.ஏ., சஸ்பெண்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபை காவலர்கள் இருவரை கடித்து குதறிய காங்., எம்.எல்.ஏ.,வை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.ராஜஸ்தான் சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த கூட்டத்தின் போது எதிர்கட்சியான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை முன்னிறுத்தி அமளியில் ஈடுபட்டனர்.சபையின் மையப்பகுதிக்கு வந்து கோஷமிட்டனர். அவர்களை சபாநாயகர் வாசுதேவ் தேவானி, அவரவர் இருக்கையில் அமர உத்தரவிட்டார்.எனினும் தொடர்ந்து கோஷமிட்டதால், சபையை விட்டு வெளியேற்றுமாறு சபை காவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.அப்போது ஒரு ஆண், ஒரு பெண் என இரு சபை காவலர்கள், காங். எம்.எல்.ஏ.., முகேஷ் பாக்கரை வலுக்கட்டாயமாக குண்டு கட்டாக தூக்க முயன்ற போது சபையை விட்டு வெளியேற மறுத்து சபை காவலர்கள் கையை முகேஷ் பாக்கர் கடித்து குதறினார். இதில் இரு காவலர்களும் காயமடைந்தனர். இதனால் ஆவேசமடைந்த சபாநாயகர் முகேஷ் பாக்கரை 6 மாதம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ஆரூர் ரங்
ஆக 07, 2024 12:22

டிஎஸ்பி பல்வீர் சிங்கிடம் விடணும்.


Nandakumar Naidu.
ஆக 07, 2024 12:05

ஓநாய்கள் கூட்டம் என்ன செய்யும்? காங்கிரஸி அதுதான் செய்துள்ளது. காங்கிரஸ் நாட்டிற்கும், வீட்டிற்கும், சமூகத்திற்கும் கேடு. மண்ணோடு மண்ணாக அழிக்கப்பட வேண்டிய கட்சி.


தமிழ்வேள்
ஆக 07, 2024 11:10

இவன் பற்களை குறடு வைத்து அனஸ்தீசியா கொடுக்காமல் பிடுங்க வேண்டும் .....


subramanian
ஆக 07, 2024 07:26

இந்திரா காங்கிரஸ்காரர்கள் வெறி பிடித்த மிருகங்கள் ஆகி விட்டனர்.


நிக்கோல்தாம்சன்
ஆக 07, 2024 06:20

பங்களாதேஸ் கு நாடு கடத்துங்க


Kasimani Baskaran
ஆக 07, 2024 05:42

அமளி செய்வோரை வெளியே அனுப்பினாலும் கூட ஆபத்திலிருந்து சட்டசபை விடுபட முடியாது போல. முதல்வரை கடிக்கவில்லை என்பது ஒரு ஆறுதல். எதற்கும் ரேபிஸ் ஊசி போட்டுக்கொள்வது நல்லது.


rama adhavan
ஆக 07, 2024 00:34

சட்டசபைக்கு உள்ள என்றாலும் கடிப்பது கிரிமினல் குற்றம். எனவே சிறையில் அடைக்கலாம். காவலரிடம் புஹார் வாங்கி சபாநாயகர் காவல் துறைக்கு புகார் செய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை