மேலும் செய்திகள்
டார்ஜிலிங்கில் பெண்கள், குழந்தைகள் உட்பட 20 பேர் பலி
1 hour(s) ago
காசோலையில் எழுத்துப்பிழை: ஆசிரியர் சஸ்பெண்ட்
1 hour(s) ago
ம.பி.,யில் இருமல் மருந்தை பரிந்துரைத்த டாக்டர் கைது
1 hour(s) ago
புதுடில்லி:டிஸ்காம்களின் மின் கட்டண உயர்வைக் கண்டித்து, டில்லி காங்கிரஸ் தலைவர்கள் நேற்று தேசிய தலைநகர் முழுதும் 55க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டம் நடத்தினர்.டிஸ்காம்களுடன் கூட்டுச் சேர்ந்ததாகக் குற்றஞ்சாட்டி, ஆம் ஆத்மி தலைமையிலான டில்லி அரசுக்கு எதிராகப் பதாகைகளை ஏந்தி, காங்கிரஸ் கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர்.மண்டி ஹவுஸ் மெட்ரோ நிலையத்திற்கு வெளியே கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் மாநில காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ் பேசியதாவது:மின்கட்டணத்தை பாதியாகக் குறைப்பதாக உறுதியளித்த கெஜ்ரிவால் அரசு, கடந்த பத்தாண்டுகளில் பின்கதவு நடவடிக்கைகளின் மூலம் அவற்றை இரட்டிப்பாக்கியுள்ளது.காங்கிரஸ் ஆட்சியில் ஒரு யூனிட் சராசரியாக 5 ரூபாயாக இருந்தது. தற்போது 10 ரூபாயாக உயர்ந்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் கொடுத்த வாக்குறுதியில் பாதிக்கு பாதியில் மின்சாரம் தருவதாகக் கூறியதை நிறைவேற்றியிருந்தால், மின் கட்டணம் 2.50 ரூபாயாக குறைந்திருக்க வேண்டும்.கடந்த 10 ஆண்டுகளாக மின்சார நுகர்வோர் மீது கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்துவதற்காக, ஒவ்வொரு ஆண்டும் 6 முதல் 10 சதவீதம் வரை உயர்த்த மின் நிறுவனங்களை கெஜ்ரிவால் அரசாங்கம் அனுமதித்து வருகிறது.இவ்வாறு பேசினார்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago