உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாதம் தொடர்பான காங்கிரசின் அணுகுமுறை பலவீனமானது: நிர்மலா சீதாராமன்

பயங்கரவாதம் தொடர்பான காங்கிரசின் அணுகுமுறை பலவீனமானது: நிர்மலா சீதாராமன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பயங்கரவாதம் தொடர்பான காங்கிரசின் அணுகுமுறை பலவீனமானது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சனம் செய்துள்ளார்.ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த இளைஞர்களுடன் நிர்மலா சீதாராமன் உரையாடினார். பின்னர் அவர் கூறியதாவது: காங்கிரசின் ஆட்சி காலத்தில், பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகம் நடந்தன. சரியான பதிலடி கொடுக்கப்படவில்லை என்பதை நாங்கள் பார்த்தோம். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=r4otd6n9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மும்பை தாக்குதல் நடத்தியவர்களுக்கு இன்னும் பாகிஸ்தான் தண்டனை வழங்கவில்லை. பயங்கரவாதம் தொடர்பான காங்கிரசின் அணுகுமுறை பலவீனமானது. இவ்வாறு அவர் கூறினார். டில்லியில் உள்ள ஆந்திர பவனுக்கு, நிர்மலா சீதாராமன் சென்று மதிய உணவு சாப்பிட்டு மக்களுடன் கலந்துரையாடினார். இந்த புகைப்படத்தை, எக்ஸ் சமூகவலைதளத்தில் பகிர்ந்து, புதிய கல்விக் கொள்கை மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவற்றை குறித்து விவாதிக்கப்பட்டது. அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

K.n. Dhasarathan
மே 11, 2024 21:28

அங்கெ தினமும் சண்டைதான், அது தெரியுமா?


shan
மே 11, 2024 20:26

உங்க அணுகு முறை திமுக விற்கு சாதகமா இல்லை பலவீனமா இருக்கே


shan
மே 11, 2024 20:24

மேடம் சபரீசன் கொள்ளை அடித்து வெளிநாடு கொண்டு போயி திரும்ப விளம்பரம் மற்றும் முதலீடாக பணம் வந்து மாட்டியதை நீங்க சொந்தங்கள் வேண்டுதலுக்கு இணங்க விட்டு விட்டீர்களே என்ற விமர்சனம் உள்ளது ஆயிரம் திருடனில் யாரையாவது பிடிச்சீங்களா சும்மா கதை இலக்கணம் பேசினால் கட்சி வளராது


Ramesh Sargam
மே 11, 2024 20:02

காங்கிரஸ் கட்சி என்றைக்கு பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்கிறது?


R Kay
மே 11, 2024 19:31

என்னவோ அக்கட்சிக்கு மற்ற விஷயங்களில் பலமான அணுகுமுறை உள்ளது போல தொனிக்கும் உங்கள் கருது ஏற்புடையதல்ல கான்+க்ராஸ் கட்சி எல்லா விதத்திலும் எல்லா விஷயங்களிலும் பலவீனமானதுதான் மக்கள் என்றோ அக்கட்சியை நிராகரித்து விட்டார்கள் ஒரு காலத்தில் அவர்களால் பயனடைந்த ஹவாலா மற்றும் மதமாற்ற கொத்தடிமைகள் மட்டும் இன்னமும் ஆதரவாக ஈனக்குரலில் முனகிக்கொண்டிருக்கிறார்கள்


P. VENKATESH RAJA
மே 11, 2024 18:12

காங்கிரஸ் கட்சி எப்போது கோழைத்தனம் ஆனது. பயங்கரவாதத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் ஆனால் கண்டிக்காது


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை