உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குடிமக்களுக்கு கேள்வி கேட்க உரிமை வழங்கிய அரசியலமைப்பு: பிரியங்கா பேச்சு

குடிமக்களுக்கு கேள்வி கேட்க உரிமை வழங்கிய அரசியலமைப்பு: பிரியங்கா பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆமதாபாத்: அரசியலமைப்புச் சட்டம் குடிமக்களுக்கு கேள்வி கேட்கவும் கிளர்ச்சி செய்யவும் உரிமை வழங்கியுள்ளது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கூறினார். குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரியங்கா பேசியதாவது: குஜராத் மக்கள் பிரதமர் மோடிக்கு மரியாதையையும், அதிகாரத்தையும் கொடுத்துள்ளனர். அவர் பிரதமராக இருந்து 10 ஆண்டுகள் ஆகிறது. நீங்கள் அவரை பெரிய மேடைகளில் முதலாளிகள் மற்றும் பிற நாட்டு பிரதமர்கள் மற்றும் ஜனாதிபதிகளுடன் பார்த்திருப்பீர்கள்.

குஜராத் மண்

அவர் தனது சொந்த தொகுதியான வாரணாசியில் ஒரு விவசாயி அல்லது ஏழையின் வீட்டிற்கு எப்போதாவது சென்றுள்ளாரா?. பிரதமர் மோடி எந்த ஏழையின் வீட்டிற்கும் சென்றதில்லை. மகாத்மா காந்தி, ஸ்ரீ சர்தார் படேல் உள்ளிட்ட பல பெரிய மனிதர்கள் குஜராத் மண்ணில் பிறந்தவர்கள். சுதந்திரத்திற்காக நாட்டின் பல பெரிய மனிதர்கள் ஆங்கிலேயர் அரசை எதிர்த்துப் போராடினார்கள்.

உரிமைகளைப் பறிக்க முயற்சி

அரசியலமைப்புச் சட்டம் குடிமக்களுக்கு கேள்வி கேட்கவும் கிளர்ச்சி செய்யவும் உரிமை வழங்கியுள்ளது. அரசியலமைப்புச் சட்டம் மாற்றப்படும் என்று பா.ஜ.., வினர் கூறும்போது, ​​மக்களிடமிருந்து அவர்களின் உரிமைகளைப் பறிக்க நினைக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. அரசியலமைப்புச் சட்டத்தைப் மாற்றினால் மக்களின் வாழ்க்கை எவ்வாறு பாதிக்கும் என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம்.

அரண்மனை

காங்கிரஸ் எம்.பி., ராகுல் 4,000 கி.மீ. நடைப்பயணம் சென்று மக்களை சந்தித்து, அவர்களின் வாழ்வில் என்னென்ன பிரச்னைகள் உள்ளன என்பதை கேட்டறிந்தார். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அரண்மனைகளில் வசிக்கிறார். விவசாயிகள் மற்றும் பெண்கள் படும் கஷ்டத்தை அவரால் எப்படி புரிந்து கொள்ள முடியும்?. நரேந்திர மோடியை அதிகாரம் சூழ்ந்துள்ளது. சுற்றி இருப்பவர்கள் அவர்களை கண்டு பயப்படுகிறார்கள். அவர்களிடம் எதிராக யாராவது குரல் எழுப்பினாலும் அந்தக் குரல் அடக்கப்படுகிறது. இவ்வாறு பிரியங்கா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

V Srinivasan
மே 04, 2024 19:59

எவ்வளவு காலம் ஏழைகள் பஜனை பாடுவீர்கள்? இப்படியே ஆட்சியை பிடித்து உங்கள் பதவி வெறியை தீர்த்துக் கொள்வீர்கள் திறமையே இல்லாமல் நாட்டை கட்டுபடுத்தி, மக்களை ஏமாற்றி


அப்புசாமி
மே 04, 2024 19:11

ஹி..ஹி.. மோடிக்கு சொந்தமா சைக்கிள் இல்லை. அதான் ஏழை விவசாயி வீட்டுக் போகலை. சொந்தமா வுடு இல்லை. அதான் அரண்மனை வாசம்.


Rajasekar Jayaraman
மே 05, 2024 11:12

உன் வீட்டுக்கு கூட்டிட்டு போய் பத்திரமா வச்சுக்கோ அவர் பாத்துக்குவார் எல்லாரையும் ..


தாமரை செல்வன்
மே 04, 2024 17:19

அப்போ இந்த எமர்ஜென்ஸி பத்தி என்ன சொல்றீங்க


Godfather_Senior
மே 04, 2024 16:49

உங்கள் குடும்பத்தினரையோ ஏதும் கேள்வி கேட்டால், கேள்வி கேட்டவாறு பலவிதத்திலும் துன்பப்படுத்துவது என்கிற கொள்கையும் உங்களுடையதுதானே இப்போது தமிழ்நாட்டில் திமுக செய்வதை உங்கள் ஆட்சி அகில இந்தியாவிலும் செய்துவந்ததை மறுக்க முடியுமா?


சசிக்குமார் திருப்பூர்
மே 04, 2024 15:55

மோடி ஏழையாக இருந்து உயர்ந்தவர். அதனால் யார் வீட்டுக்கும் செல்லாமல் அவர்கள் வாழ்வை முன்னேற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஆனால் உங்கள் பாட்டி அப்பா பிறகு அம்மா அண்ணன் இப்போது நீங்கள் அதே வீடு அதே அவர்கள் பரம்பரை இப்போதும் மாறி விட்டீர்கள் அப்படியே இருக்கு


ஆரூர் ரங்
மே 04, 2024 15:24

எல்லாப் பிரதமர்களும் அதிகாரப்பூர்வ இல்லங்களில்தான் வசித்தார்கள். அதில் உங்கள் தந்தை, பாட்டி, நேரு தாத்தாவும் அடங்குவர்.


ஆரூர் ரங்
மே 04, 2024 15:00

உங்க பாட்டி பிறப்பித்த அவசர நிலைக் காலத்தில் பேச்சுரிமை காணாமற் போயிருந்ததே. சிறைவாசம், ஏனென்றால் வனவாசம், எத்தனையோ பேர் வழக்கே இல்லாமல் சிறையில் மடிந்தனர் தெரியுமா?


ஆரூர் ரங்
மே 04, 2024 14:57

என்னது மோடி அரண்மனையில் வசிக்கிறாரா?.


Chandran,Ooty
மே 04, 2024 14:49

விழுப்புரத்தில் நடக்கும் திருவிழா போல் குஜராத் மாநிலத்திலும் அந்த மாதிரி திருவிழா நடக்கும் போல தெரிகிறது.


அருண் பிரகாஷ் மதுரை
மே 04, 2024 14:31

கிராம சபை கூட்டம் என்ற பெயரில் மரத்தடியில் உட்காருவது, புகார் பெட்டியில் புகார் மனு போடுங்கள் ஆட்சிக்கு வந்து 100 நாளில் தீர்வு காணப்படும் இது எல்லாம் மக்களை ஏமாற்றி ஆட்சியைப் பிடிக்க மட்டும்தான்... உதாரணம் எங்கள் ஊர் முதல்வர் ஆட்சிக்கு வந்துவிட்டால் ஒன்னும் செய்ய மாட்டோம் 30000 கோடி, 40000 கோடினு வருடா வருடம் வருமானம் மட்டும் பார்ப்போம் ..அதைதான் உங்க சகோதரரும் செய்வார்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை