மேலும் செய்திகள்
மக்கள் ஆசீர்வாதங்களுக்கு நன்றி: பழைய நினைவுகளை பகிர்ந்தார் மோடி
20 minutes ago | 2
பெரும் அவமானம்!
4 hour(s) ago | 1
பீஹார் சட்டசபை தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டி!
5 hour(s) ago | 3
புதுடில்லி:டில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், அக்கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் இன்று நடக்கிறது.புதுடில்லி சிவில் லைன்ஸ் முதல்வர் பங்களாவில் நடக்கும் இந்தக் கூட்டத்துக்கு, கட்சியின் மூத்த தலைவர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.லோக்சபா தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தி பல முக்கிய முடிவுகள் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்திருப்பதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் மார்ச் 21ல் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவாலுக்கு, உச்ச நீதிமன்றம் நேற்று முன் தினம் இடைக்கால ஜாமின் வழங்கியது. ஜூன் 2ம் தேதி அவர் மீண்டும் சிறையில் ஆஜராக வேண்டும்.டில்லியின் 7 லோக்சபா தொகுதிகள், ஹரியானாவின் 10 தொகுதிகளுக்கு வரும் 25ம் தேதி தேர்தல் நடக்கிறது. அண்டை மாநிலமான பஞ்சாபின் 13 தொகுதிகளுக்கும் யூனியன் பிரதேசமான சண்டிகர் தொகுதிக்கும் ஜூன் 1ல் ஓட்டுப் பதிவு நடக்கிறது.
20 minutes ago | 2
4 hour(s) ago | 1
5 hour(s) ago | 3