உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கார்ப்பரேட் நிறுவனங்கள் வங்கி துவங்க அனுமதி இல்லை : என்கிறார் ரிசர்வ் வங்கி கவர்னர்

கார்ப்பரேட் நிறுவனங்கள் வங்கி துவங்க அனுமதி இல்லை : என்கிறார் ரிசர்வ் வங்கி கவர்னர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: கார்ப்பரேட் நிறுவனங்கள், வங்கிகள் துவங்குவதை அனுமதிக்கும் எந்த ஒரு திட்டமும் ரிசர்வ் வங்கிக்கு இல்லை என, அதன் கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், இவ்வாறு தெரிவித்தார்.இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: கார்ப்பரேட் நிறுவனங்களை வங்கிகள் நடத்த அனுமதிப்பது ஒரு முரண்பாடான முடிவாக இருக்கும். இந்நிறுவனங்கள் தங்களது நலன் சார்ந்து, தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்காக மட்டுமே இயங்கும் வாய்ப்புகள் அதிகம்.உலகளவில் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பல முயற்சிகள், இது போன்ற பிரச்னைகள் இருப்பதை நிரூபித்து உள்ளன.அதனால், இப்போதைக்கு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து ரிசர்வ் வங்கி எதுவும் பரிசீலிக்கவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்களை கண்காணிப்பதும், ஒழுங்குபடுத்துவதும் மிகவும் கடினமான செயலாகும். இதில் உள்ள ஆபத்துகளும் அதிகம். மற்ற வணிகங்களைக் காட்டிலும் வங்கிகளின் செயல்பாடுகள் வித்தியாசமானது.நாட்டின் பொருளாதாரம் வளர போதுமான வளங்கள் தேவை என்றாலும், வங்கிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமே அதற்கு தீர்வாகாது. எண்ணிக்கையை காட்டிலும், வளமான, வலுவான மற்றும் சிறப்பாக நிர்வகிக்கப்படும் வங்கிகளே நாட்டின் முன்னேற்றத்திற்கு அவசியம். வங்கிகளுக்கான உரிமம் வழங்குவது எளிதாக்கப்பட்டுள்ளது. பலதரப்பட்ட சேவைகளை வழங்க உரிமம் பெற விரும்பும் வங்கி கள், ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பித்து, உரிமம் பெற்றுக்கொள்ளலாம். கார்ப்பரேட் நிறுவனங்களை கண்காணிப்பதும், ஒழுங்குபடுத்துவதும் மிகவும் கடினமான செயலாகும். இவ்வாறு தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

venugopal s
ஜூலை 20, 2024 11:22

அதானி கம்பெனிகளும் கூட அனுமதி இல்லையா ? அப்படியானால் அந்த சட்டத்தை மாற்றி விட வேண்டியதுதான்!


Barakat Ali
ஜூலை 20, 2024 11:09

கப்பிலித்தனமான விளக்கம் ... ஏற்கனவே இயங்கிவரும் தனியார் வங்கிகள் ஐசிஐசிஐ, ஆக்சிஸ், பந்தன், ஃபெடரல் போன்றவை கார்ப்பரேட் நிறுவனங்கள் இல்லையா ???? பொதுத்துறை வங்கிகளில் இருந்து கடனை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சரியான ஈட்டுறுதி இல்லாமலேயே அள்ளிக்கொடுக்கிறீர்கள் .... அவை பிற்பாடு வாராக்கடன்கள் ஆகிவிடுகின்றன .... அது பரவாயில்லையா ???? உண்மையான காரணம் "எங்களுடைய கோர் பிசினஸ் வங்கி வர்த்தகம் இல்லை" என்று கூறி அவர்கள் ரிசர்வ் வங்கிக்கு லஞ்சம் கொடுப்பதைத் தவிர்த்திருப்பார்கள் .


spr
ஜூலை 20, 2024 09:06

ஏற்கனவே பல ஏர்டெல் போன்ற கைபேசி தொடர்பு நிறுவனங்களும் இதர கார்பொரேட் நிறுவனங்களும் வங்கிகளை நிறுவி கல்லா கட்டிக்க கொண்டிருப்பது ? என்ன நடவடிக்கை எடுத்தார்?


GMM
ஜூலை 20, 2024 08:00

கார்ப்பரேட் நிறுவனங்கள் வங்கி ஆரம்பிப்பது கூடாது. கண்காணித்து நடவடிக்கை எடுப்பது கடினம். நீதிமன்றம் பொருளாதார இழப்பை பொருட்படுத்தாமல் விசாரிக்கும். அரசுக்கு இழப்பு ஏற்படும். போதிய வங்கிகள் உள்ளன. அனுமதிப்பது, வங்கிகள் அரசு பணியை தானே மேற்கொண்டு கட்டணம் செலுத்தி விடுவதற்கு சமம்.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை