உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறுமியின் 26 வார கருவை கலைக்க கோர்ட் அனுமதி

சிறுமியின் 26 வார கருவை கலைக்க கோர்ட் அனுமதி

ஹைதராபாத், பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான, 12 வயது சிறுமியின், 26 வார கருவை கலைப்பதற்கு, தெலுங்கானா உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது.தெலுங்கானாவைச் சேர்ந்த 12 வயது சிறுமி, பலரால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானார். இதில் கருவுற்ற அவரின், 26 வார கருவை கலைப்பதற்கு அனுமதி கேட்டு, அவரின் பெற்றோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.குழந்தை பெறுவதால், அந்தச் சிறுமியின் உடல்நிலை மற்றும் மனநிலை பாதிக்கப்படும். மேலும், பிறக்கும் குழந்தையும் இது போன்ற பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும். அதனால், கருவை கலைக்க அனுமதிக்க வேண்டும் என, பெற்றோர் தரப்பில் வாதிடப்பட்டது.இதை ஏற்ற உயர் நீதிமன்றம், அந்த சிறுமியின், 26 வார கருவை, 48 மணி நேரத்துக்குள் கலைப்பதற்கான நடவடிக்கை எடுக்க, ஹைதராபாதில் உள்ள காந்தி மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் உத்தரவிட்டது. மேலும், மரபணு சோதனை உள்ளிட்டவற்றுக்காக கருவின் மாதிரிகளை சேகரித்து வைக்கும்படியும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.3-0 வார கருவை கலைக்க அனுமதி: டில்லியைச் சேர்ந்த, 31 வயது பெண்ணின் முதல் குழந்தைக்கு, நரம்பியல் தொடர்பான பிரச்னை இருந்தது. இந்நிலையில், அவருடைய கர்ப்பத்தில் உள்ள இரண்டாவது குழந்தைக்கும், நரம்பியல் தொடர்பான பிரச்னை இருப்பது பரிசோதனைகளில் தெரிய வந்தது. குழந்தை பிறந்தாலும், கடுமையான நோய்களால் பாதிக்கப்படும் அபாயம் இருந்தது. இதையடுத்து, தன் 30 வார கருவை கலைக்க அந்த பெண், டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.எய்ம்ஸ் மருத்துவர் குழுவின் அறிக்கையை ஏற்று, அந்த கருவை கலைக்க உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் அனுமதி அளித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி