உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புத்தகத்துக்கு பைபிள் பெயர்; நடிகைக்கு கோர்ட் நோட்டீஸ்

புத்தகத்துக்கு பைபிள் பெயர்; நடிகைக்கு கோர்ட் நோட்டீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்:தன் கர்ப்பகால நினைவுகள் தொடர்பாக, பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் வெளியிட்டுள்ள புத்தகத்துக்கு, 'பைபிள்' என்று பெயரிட்டுள்ளதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இது குறித்து பதிலளிக்கும்படி அவருக்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர், 42, பிரபல நடிகர் சயீப் அலி கானை திருமணம் செய்தார். தான் கர்ப்பமாக இருந்தது தொடர்பாக, கரீனா கபூர் ஒரு புத்தகத்தை எழுதினார். கடந்த 2021ல் வெளியான இந்த புத்தகத்தில், தன் அனுபவங்களுடன், தாயாக தயாராகும் பெண்களுக்கு பல ஆலோசனைகளை அவர் கூறியுள்ளார்.இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரைச் சேர்ந்த, கிறிஸ்டோபர் ஆன்டனி என்ற வழக்கறிஞர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.அதில், 'கரீனா கபூர் தன் புத்தகத்தின் தலைப்பில், பைபிள் என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். புனித நுாலாக கருதும் கிறிஸ்துவர்களின் மத உணர்வை புண்படுத்துவதாக இது அமைந்துள்ளது. அதனால், புத்தகத்துக்கு தடை விதிக்க வேண்டும்' என, மனுவில் அவர் கூறிஉள்ளார்.முன்னதாக இது குறித்த புகாரை பதிவு செய்ய போலீசார் மறுத்ததாகவும், கீழமை நீதிமன்றங்கள் அதை விசாரிக்க மறுத்ததாகவும் அவர் மனுவில் கூறிஉள்ளார்.இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, நடிகை கரீனா கபூருக்கு நோட்டீஸ் அனுப்ப, மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Balasundaram P
மே 12, 2024 14:24

பெயர் வைத்ததுக்கு இவ்வளவு பெரிய பிரச்சனையா?


கென்னடி,அடைக்கலபுரம்
மே 12, 2024 12:14

வீட்டுல அடங்கி கெடக்க மாட்டேன்றாளுக...


J.Isaac
மே 12, 2024 12:09

ஆணவம், திமிர்


Svs Yaadum oore
மே 12, 2024 06:46

வெறும் பெயருக்கு என்ன காப்புரிமை கொடுத்துள்ளார்களா??இந்த பெயர் வைக்க கூடாது என்று சட்டம் உள்ளதா??


நிக்கோல்தாம்சன்
மே 12, 2024 06:22

லத்தின் வார்த்தை பைபிலியா என்றால் புத்தகம் என்று அர்த்தம், சாஃட்வேர் சம்பந்தப்பட்ட பல புத்தகங்கள் பைபிள் என்று வந்திருப்பதை ஆண்டனி அறியவில்லை போலும்


K.Muthuraj
மே 12, 2024 09:45

உண்மையில் பைபிள் என்ற வார்த்தையினை வைப்பதற்கு கிறிஸ்தவர்கள் பெருமைப்படத்தான் செய்வார்கள் இது விளம்பர வழக்கு


J.V. Iyer
மே 12, 2024 04:19

ஹிந்து மதத்திற்கு எதிராக பேசினால், எழுதினால் அது தக்காளிச் சட்னி அப்படித்தானே சட்டம் ஒரு இருட்டறை இப்போது எதையும் வாங்கலாம் நீதியையும் சேர்த்து என்று மக்கள் பொதுவெளியில் பேச ஆரம்பித்துவிட்டனர் எல்லோருக்கும் ஒரு சட்டம் வேண்டும்


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி