வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நல்ல நியூஸ்
மேலும் செய்திகள்
மருத்துவமனையில் பரூக் அப்துல்லா அனுமதி
1 hour(s) ago
பெங்களூரு : கடனை திருப்பிச் செலுத்தாததால், கட்டடத்தை ஜப்தி செய்ய வங்கி அதிகாரிகள் வந்தனர். அந்த கட்டடத்தில் அரசு அலுவலகங்கள் இயங்கியதால், பரபரப்பான சூழ்நிலை உருவானது.பெங்களூரின், இன்பென்ட்ரி ரோட்டில் உள்ள எம்பசி கட்டடம், ஜெயராம் என்பவருக்கு சொந்தமானது. இவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, இந்த கட்டடத்தின் நான்காவது மாடியை, வங்கியில் அடமானம் வைத்து 19 கோடி ரூபாய் கடன் வாங்கினார். தற்போது அசல், வட்டியுடன் சேர்த்து 24 கோடி ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது.பல முறை வங்கி நோட்டீஸ் அளித்தும், ஜெயராம் பொருட்படுத்தவில்லை. எனவே பெங்களூரின், 32வது ஏ.சி.எம்.எம்., நீதிமன்றத்தில் வங்கி அதிகாரிகள் வழக்கு தொடர்ந்தனர்.விசாரணை நடத்திய நீதிமன்றம், ஜெயராம் அடமானம் வைத்திருந்த கட்டடத்தின் நான்காவது மாடியை, ஜப்தி செய்யும்படி உத்தரவிட்டது.இதன்படி, எம்பசி கட்டடத்தின் நான்காவது மாடியை ஜப்தி செய்ய, விதான் சவுதா போலீசார், கோர்ட் கமிஷனருடன், வங்கி அதிகாரிகள் நேற்று மதியம் வந்தனர். மாடியில் சுற்றுலாத்துறை உட்பட, அரசு சார்ந்த இரண்டு அலுவலகங்கள் இயங்குகின்றன. கட்டட உரிமையாளர் ஜெயராமுக்கு, மாதந்தோறும் 39 லட்சம் ரூபாய் வாடகை செலுத்துகின்றன.அலுவலகங்களை காலி செய்ய, வங்கி அதிகாரிகள் வந்ததை அறிந்த, அரசு உயர் அதிகாரிகள், வங்கி முக்கியஸ்தர்களை தொடர்பு கொண்டு பேசினர்.கடனை செலுத்த கட்டட உரிமையாளர் ஜெயராமுக்கு மூன்று மாத அவகாசம் அளிக்கும்படி கேட்டுக்கொண்டனர். இதற்கு வங்கி அதிகாரிகள் சம்மதித்து, திரும்பிச் சென்றனர்.
நல்ல நியூஸ்
1 hour(s) ago