உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அங்கன்வாடியில் சிறார்களுக்கு வழங்கிய உணவில் செத்த எலி

அங்கன்வாடியில் சிறார்களுக்கு வழங்கிய உணவில் செத்த எலி

சிக்கபல்லாபூர்: அங்கன்வாடிகளில் நடக்கும் குளறுபடிகள் ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வருகின்றன. தற்போது குழந்தைக்கு வழங்கப்பட்ட உணவு பாக்கெட்டில், செத்த எலி கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அங்கன்வாடிகள் மூலம் சிறார்களுக்கு கர்ப்பிணியர், குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு முட்டை, காய்கறிகள் ஊட்டச்சத்து உணவு வழங்குவதாக, அரசு கூறுகிறது. இதற்காக நுாற்றுக்கணக்கான கோடி ரூபாய் செலவிடுகிறது. ஆனால் அங்கன்வாடிகளில் தரமற்ற உணவு வழங்கப்படுகிறது.குழந்தைகளுக்கு அழுகிய காய்கறிகள் பயன்படுத்திய உணவு, அழுகிய முட்டைகள் வழங்குவது, சமீப நாட்களாக அம்பலமாகிறது. அங்கன்வாடி ஒன்றில் சிறார்களுக்கு முட்டையை கொடுத்து, திரும்பப் பெற்ற சம்பவம் நடந்தது. பலரும் கண்டித்தனர்.இதற்கிடையில், குழந்தைக்கு வழங்கப்பட்ட உணவுப் பொட்டலத்தில், செத்த எலி இருந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிக்கபல்லாபூர் குடிபண்டேவின், கருடாஜார கிராமத்தில் நேற்று முன் தினம் அங்கன்வாடி ஊழியர்கள், சிறார்களின் வீடுகளுக்கு வந்து உணவுப் பொட்டலம் வழங்கினர். நந்தேஷ், லட்சுமி தம்பதியின் குழந்தைக்கு வழங்கப்பட்ட உணவு பொட்டலத்தை பிரித்தபோது, செத்த எலி கிடப்பது தெரிந்தது. அதிர்ச்சி அடைந்த அவர்கள், கிராமத்தினரிடம் விஷயத்தை கூறினர்.அங்கன்வாடி ஊழியர்களை கிராமத்தினர், வன்மையாக கண்டித்தனர். சிறார்களின் ஊட்டச்சத்தை அதிகரிக்க உணவு வழங்குவதாக அரசு கூறுகிறது. ஆனால், இத்தகைய உணவு வழங்கி, குழந்தைகளின் உயிருடன் விளையாடுகின்றனர்.இந்த விஷயம் மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சரின் கவனத்துக்கு செல்லவில்லையா? இந்த உணவை சிறார்களுக்கு கொடுத்தால் அவர்களின் கதி என்ன? அங்கன்வாடி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கிராமத்தினர் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ