உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காவிரி ஆற்றில் கழிவுநீர் சுத்திகரித்து விட கோரிக்கை

காவிரி ஆற்றில் கழிவுநீர் சுத்திகரித்து விட கோரிக்கை

மாண்டியா : ''மைசூரு மாநகராட்சிப் பகுதிகளின் கழிவுநீரை, காவிரி ஆற்றில் நேரடியாக விடக் கூடாது. சுத்திகரித்து விட வேண்டும்,'' என, மாண்டியா மாவட்ட கலெக்டர் குமார் வலியுறுத்தி உள்ளார்.இதுதொடர்பாக மைசூரு கலெக்டர் ராஜேந்திரா, மைசூரு மாநகராட்சி கமிஷனர் மது ஆகியோரிடம், மாண்டியா மாவட்ட கலெக்டர் குமார் கூறியதாவது:மாண்டியா, ஸ்ரீரங்கபட்டணாவின் சந்தகாலு அருகில் பம்ப் ஹவுஸ் கட்டப்பட்டுள்ளது. அங்கிருந்து கஞ்சாம் எல்லைக்கு உட்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. மைசூரில் இருந்து கழிவுநீர் நேரடியாக, காவிரி ஆற்றில் கலப்பதால் மக்களுக்கு குடிநீர் வழங்குவதில், சிக்கல் ஏற்படுகிறது.அசுத்த நீர் பயன்படுத்துவதால், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சுத்திகரிக்கப்படாத நீரை, காவிரி ஆற்றில் விடக்கூடாது. காவிரி நீர்ப்பாசன கார்ப்பரேஷன், மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம், உள்ளாட்சி அதிகாரிகளும், மைசூரு மாநகராட்சிக்கு கடிதம் எழுதி, கழிவுநீரை ஆற்றில் விடக்கூடாது என, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.சந்தகாலு அருகில் மைசூரு மாநகராட்சியின் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் உள்ளது. இந்த மையம் 30 எம்.எல்.டி., கழிவுநீரை சுத்திகரிக்கும் திறன் கொண்டது. கூடுதலாக வரும் கழிவுநீரை, சுத்தகரிக்காமல் அப்படியே ஆற்றில் விடுகின்றனர்.ஆற்றின் சூழலை சுத்தமாக பராமரிக்க வேண்டும், குடிநீரை பாதுகாக்கும் நோக்கில், கழிவுநீரை அப்படியே விட வேண்டாம் என, மாநகராட்சி அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி