உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜனநாயகத்தை காப்பாற்ற இதை செய்யுங்கள்: கெஜ்ரிவால் பேச்சு

ஜனநாயகத்தை காப்பாற்ற இதை செய்யுங்கள்: கெஜ்ரிவால் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: ஜனநாயகத்தை காப்பாற்ற பா.ஜ.,வை தோற்கடிப்பது அவசியம் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.பஞ்சாப் மாநிலம் பிரோஸ்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கெஜ்ரிவால் பேசியதாவது: பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சிறையில் அடைத்த பின் தேர்தல் நடந்தது. ரஷ்யாவில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக புடின் தனது எதிரிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினார். எதிரணியினரை குறிவைத்து தேர்தலில் வெற்றி பெறும் சூழல், நம் நாட்டிலும் உருவாகி வருகிறது. ஜனநாயகத்தை காப்பாற்ற பா.ஜ.,வை தோற்கடிப்பது அவசியம்.

பெரிய எஃகு ஆலை

பஞ்சாபில் உள்ள 13 லோக்சபா தொகுதியிலும் ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெறச் செய்தால், அது வலுவடைந்து, மத்திய அரசில் முக்கியப் பங்கு வகிக்கும். பஞ்சாபில் ஆம்ஆத்மி ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. நாங்கள் ஆட்சிக்கு வருவதற்குமுன்பு, தொழில்துறையின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. ஆனால், தற்போது நிலைமை மாறிவிட்டது. ரூ. 56,000 கோடி மதிப்புள்ள முதலீடுகள் பஞ்சாபிற்கு வந்துள்ளது. டாடாவின் இரண்டாவது பெரிய எஃகு ஆலை பஞ்சாபில் அமைக்கப்படுகிறது.

பொருளாதாரம்

ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகளின் நிறுவனங்களின் ஆலைகள் அமைக்கத் துவங்கி உள்ளன. கமிஷன் ஏஜெண்டுகளையும், வியாபாரிகளையும் இடைத்தரகர்களாக நரேந்திர மோடி கருதுகிறார். அவர்களை நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக நாங்கள் கருதுகிறோம். நாட்டின் பொருளாதாரத்திற்கு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு வர்த்தகர்களும், கமிஷன் ஏஜெண்டுகளும் முக்கியம். அவர்கள் இல்லை என்றால், நாட்டின் பொருளாதாரம் முன்னேறாது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Prabahara Lingan
மே 27, 2024 11:55

இவர் ஒரு கமிஷன் ஏஜன்ட்


Jai
மே 27, 2024 09:13

கமிஷன் ஏஜெண்டுகள் நாட்டு பொருளாதாரத்திற்கு முக்கியம் என்று பேசிய ஒரே அரசியல்வாதி கெஜ்ரிவால் தான். அனைத்து மாநிலங்களிலும் நெல் கோதுமை கொள்முதலுக்கு நேரடியாக மத்திய அரசின் கிடங்குகளுக்கு சென்று விவசாயிகள் கொடுப்பார்கள். ஆனால் பஞ்சாபில் மட்டும் விவசாயிகள் நேரடியாக தங்கள் விளைவு பொருட்களை மத்திய அரசின் கடமைகளில் கொடுக்க முடியாது இரண்டு இரண்டு இடை தரகர்கள் உள்ள ஒன்று மாநில அரசு மற்றொன்று கமிஷன் ஏஜென்ட்கள். இந்த கமிஷன ஏஜெண்டுகளை பாதுகாப்பதற்கு தான் பஞ்சாப் விவசாயிகள் என்ற போர்வையில் டெல்லிக்கு சென்று போராட்டம் நடத்துகின்றனர்.


R.Varadarajan
மே 27, 2024 07:23

உன்னை முதலில் காப்பாற்றிக்கொள்


HoneyBee
மே 26, 2024 21:39

முதலில் ஒழுங்கா இருந்து உபதேசம் செய்யனும். ஊழலே உன் பிராதான மந்திரம்... ஜனநாயகம் பற்றி பேசலாமா


M Ramachandran
மே 26, 2024 21:05

புளுகுவதில் பொய் போர்ஜரி வால்,. ராவுளு, மற்றும் ஸ்டாலின் மூவருக்கும் போட்டி வைத்தால் யார் ஜெயிப்பார்கள்?


Manavalan
மே 26, 2024 19:45

Wè need only corrupt free leader. The country allows corrupt to advise citizen.


Dharmavaan
மே 26, 2024 18:52

எல்லா திருடர்களும் தன்னை காப்பாற்றிக்கொள்ள ஜனநாயகம் பற்றி பேசுகின்றன சாத்தான் வேதம் ஓதுகிறது


sankar
மே 26, 2024 18:19

ஜனநாயகத்தை காப்பாற்ற - இந்த சாராய களவாணிக்கு நிரந்தர ஜெயில் தண்டனை கொடுங்கள்


GMM
மே 26, 2024 18:15

கமிசன் ஏஜெண்ட் அவசியம் என்கிறார் கெஜ்ரிவால். வர்த்தகத்தில் லாபம், கமிஷன் அடங்காதா? கெஜ்ரிவால் வந்தால், லஞ்சத்தை / ஊழலை சட்ட பூர்வமாக ஆம் ஆத்மி ஆக்கிவிடும்.


vadivelu
மே 26, 2024 18:13

அதெல்லாம் தெரியாது... வாக்களிக்காதீர்கள் அவ்வளவுதான்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை