உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரு பொய்யை மறைக்க மேலும் பொய் சொல்லக்கூடாது

ஒரு பொய்யை மறைக்க மேலும் பொய் சொல்லக்கூடாது

பெலகாவி : ''வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேட்டில், தவறு செய்தோர் அதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஒரு பொய்யை மறைக்க நுாறு பொய்களை சொல்லக்கூடாது,'' என, பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி தெரிவித்தார்.பெலகாவியில் நேற்று அவர் அளித்த பேட்டி:வால்மீகி மேம்பாட்டு ஆணையம், அரசியல் வடிவம் பெறுவதாக, இப்போதே கூற முடியாது. அதற்காக அரசியலே இல்லை என, தீர்மானிக்கவும் முடியாது. விசாரணை நடக்கிறது. இதன் உண்மையை ஆவணங்களே கூற வேண்டும்.முன்னாள் அமைச்சர் நாகேந்திரா, தவறு செய்திருந்தால் அரசுக்கு நிச்சயம் தர்மசங்கடம் ஏற்படும். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு தொடர்பிருந்தால், அரசுக்கு களங்கம் ஏற்படும்.இவ்விஷயத்தால், முதல்வர் சித்தராமையாவின் பதவிக்கு எந்த பாதிப்பும் இல்லை. எங்கள் துறைகளை நாங்கள் கவனிக்கிறோம். துறை எங்களின் பொறுப்பு. இதற்கும், முதல்வர் நாற்காலிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.மைசூரில் நடந்த 'மூடா' முறைகேட்டை கண்டித்து, பா.ஜ.,வினர் 'மைசூரு சலோ' போராட்டம் நடத்துகின்றனர். இந்த போராட்டம், அரசில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இத்தகைய பல முறைகேடுகள் நடந்துள்ளன நமக்கும் தெரியும்.பெலகாவியிலும் இதுபோன்ற முறைகேடுகளை, நாங்கள் பார்த்துள்ளோம். எனவே 'மூடா' மற்றும் வால்மீகி மேம்பாட்டு ஆணையம் என, இரண்டையும் ஒப்பிட முடியாது.'மூடா' முறைகேடு, அரசியல் வடிவம் பெறுகிறது என, கூறலாம். காங்கிரசின் உட்பூசலால், 'மூடா' போன்ற முறைகேடுகள் நடப்பதாக, பா.ஜ.,வினர் குற்றஞ்சாட்டுகின்றனர். அது உண்மை அல்ல. எந்த கட்சியில் உட்கட்சி பூசல் உள்ளதோ, இல்லையோ, ஏதாவது ஒரு முறைகேடு வெளிச்சத்துக்கு வந்தே தீரும்.வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேட்டில், தவறு செய்திருந்தால் அதை ஒப்புக்கொள்ள வேண்டும். அது அத்துடன் முடிந்துவிடும். ஒரு பொய்யை மறைக்க, நுாறு பொய்களை சொல்லக்கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி