உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிகாலையில் மழை சாலைகளில் வெள்ளம்

அதிகாலையில் மழை சாலைகளில் வெள்ளம்

புதுடில்லி,:தலைநகர் டில்லியில் நேற்று அதிகாலையில் பெய்த மழையால் மாநகரின் பல இடங்களில் மழைநீர் தேங்கியது. சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.மதர் தெரசா கிரசென்ட், சிவாஜி ஸ்டேடியம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே நியாய மார்க், சர். எம். விஸ்வேஸ்வரய்யா மோதி பாக் மெட்ரோ ரயில் நிலையம், சாந்தி பாத், பிகாஜி காமா பிளேஸ் மற்றும் மோதி பாக் ரிங் ரோடு ஆகிய இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ரோஹ்தக் சாலையின் இரு பாதைகளிலும் வெள்ளம் தேங்கியது. அதேபோல், முண்ட்கா சாலைகளி ஆங்காங்கே பள்ளங்கள் உருவாகின.மத்திய டில்லி மின்டோ சாலையில் அதிகாலையிலேயே மழைநீர் தேங்கியதால், போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.சாலைகள் மற்றும் சுரங்கப் பாதைகளில் தேங்கிய வெள்ளத்தை அகற்றும் பணியில் மாநகராட்சி மற்றும் பொதுப் பணித்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர்.சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்வது மற்றும் தண்ணீர் தேங்கிய சாலைகள் ஏராளமானோர் மொபைல் போனில் படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.ராஜஸ்தான்அண்டை மாநிலமான ராஜஸ்தானில் அடுத்த வாரம் பருவமழை தீவிரமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ராஜஸ்தானின் பல மாவட்டங்களில் கனமழை கொட்டுகிறது. நேற்று காலை 8:30 மணி வரை கரவுலி, டோங்க், சவாய் மாதோபூர், ஜெய்ப்பூர், ஜலாவர், கோட்டா, பன்ஸ்வாரா, பில்வாரா, பரத்பூர் மற்றும் நாகவுர் ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.அடுத்த வாரம் கிழக்கு ராஜஸ்தானில் பல இடங்களில் பருவமழை தீவிரமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.வரும் 29ம் தேதி முதல் 31ம் தேதி வரை மேற்கு ராஜஸ்தானின் ஜோத்பூர் மற்றும் பிகானீரில் கனமழை கொட்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்