உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிகாரிகள் ஆலோசனை கூடாது அரசுக்கு தேர்தல் கமிஷன் குட்டு

அதிகாரிகள் ஆலோசனை கூடாது அரசுக்கு தேர்தல் கமிஷன் குட்டு

பெங்களூரு: ''தேர்தல் பணிகள் முடியும் வரை, கலெக்டர்கள் முதல், எந்த துறை அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்த கூடாது,'' என மாநில தலைமை செயலருக்கு, மாநில தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ்குமார் மீனா கடிதம் எழுதி உள்ளார்.கர்நாடகாவில் ஏப்ரல் 26, மே 7 என இரண்டு கட்டங்களாக, லோக்சபா தேர்தல் நடந்தது. நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக நடக்கும் தேர்தல்களில் பதிவாகும் ஓட்டுகள், ஜூன் 4ம் தேதி எண்ணப்படுகின்றன. ஆனாலும், ஜூன் 6ம் தேதி வரை, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்.மேலும், ஆசிரியர், பட்டதாரி தேர்தல் ஜூன் 3ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை, 6ம் தேதி நடக்கிறது. 12ம் தேதி வரை, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்.இதற்கிடையில், முதல்வர், துணை முதல்வர், சில அமைச்சர்கள் தங்கள் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.இதையடுத்து, மாநில தலைமை செயலர் ரஜ்னீஷ் கோயலுக்கு, மாநில தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ்குமார் மீனா, நேற்று ஒரு கடிதம் எழுதினார்.அதில் குறிப்பிட்டுள்ளதாவது:லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கைக்கு தேவையான முன் ஏற்பாடுகளை செய்து வருகிறோம். மேலவை தேர்தல் ஏற்பாடுகளும் நடைமுறையில் உள்ளன.தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தும், சில துறைகளின் கூடுதல் தலைமை செயலர்கள், முதன்மை செயலர்கள், செயலர்கள், முக்கியஸ்தர்கள், துறை வாரியாக ஆலோசனை கூட்டம் நடத்தி உள்ளனர்.வீடியோ கான்பரன்ஸ் வாயிலாகவும் ஆலோசனை நடத்தி உள்ளனர். இதனால், தேர்தல் பணிகள் முடியும் வரை, கலெக்டர்கள் முதல், எந்த துறை அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்த கூடாது.ஒரு வேளை ஏற்கனவே திட்டமிட்டிருந்தால், அத்தகைய ஆலோசனை கூட்டங்களை ஒத்தி வையுங்கள். இது குறித்து, அனைத்து துறை முக்கியஸ்தர்களுக்கும் அறிவுறுத்தும்படி கோருகிறேன். ஆலோசனை அவசியம் எனில், தேர்தல் கமிஷனிடம் அனுமதி கேட்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ